சுமிதா தல்வால்கர் | |
---|---|
பிறப்பு | சுமிதா கோவிகர் 5 செப்டம்பர் 1954 |
இறப்பு | (அகவை 59) மும்பை, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் |
உறவினர்கள் | சுலேகா தல்வால்கர் பூர்ணிமா தல்வால்கர் (மருமகள்) |
சுமிதா தல்வால்கர் (Smita Talwalkar) (5 செப்டம்பர் 1954 - 6 ஆகத்து 2014) ஒரு மராத்தித் திரைப்பட நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குநரும் ஆவார். கலாத் நகலத் (1989), து திதே மீ (1998) படங்களின் தயாரிப்பாளராக இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். [1]
1954 செப்டம்பர் 5 அன்று இவர் சுமிதா கோவில்கராகப் பிறந்தார். [2] இவர், தான் நடிப்புக்கு அறிமுகமாவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்தார். [3] ஒரு நடிகையாக இவரது ஆரம்ப வெற்றிகரமான படங்களில் 1986ஆம் ஆண்டு வெளியான து சௌபாக்யவதி ஹோ, கத்பாத் கோட்டாலா ஆகியவை அடங்கும். கத்பாத் கோட்டாலா ஒரு நகைச்சுவை காதல் படம், பல்வேறு குறிப்பிடத்தக்க நடிகர்கள் இதில் நடித்திருந்தனர். 1989ஆம் ஆண்டில் அஸ்மிதா சித்ரா என்ற திரைப்பட நிறுவனத்தின் கீழ் தனது முதல் படமான கலாத் நகலத் படத்துடன் திரைப்பட தயாரிப்பாளரனார். திருமணத்திற்கு புறம்பான விவகாரத்தில் பெற்றோர்களில் ஒருவர் ஈடுபட்டுள்ள குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் நுட்பமான கதையை இந்தப் படம் கையாண்டது. இயக்குநர் காஞ்சன் நாயக் இயக்கியிருந்த இப்படம் 37வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த மராத்தி அம்சமாக தேர்வு செய்யப்பட்டது.
இவர், "அஸ்மிதா சித்ர அகாதமி" என்ற பெயரில் ஒரு நடிப்புப் பள்ளியையும் நடத்தி வருகிறார். இது புனே, மும்பை மற்றும் தானே ஆகிய இடங்களில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளது. மேலும், பல்வேறு துறைகளில் 300 முதல் 350 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.[3] தல்வால்கர் ஒரு நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் நாடகங்களில் பணியாற்றினார். இவர் உள்ளூர் மற்றும் சர்வதேச பல்வேறு மேடை நிகழ்வுகளின் நடுவராகவும் இருந்தார். நாட்ய சித்ர கலா அகாடமி ஏற்பாடு செய்த மராத்தித் திரைப்பட விழாவின் தலைவராகவும் இருந்தார்.
தல்வால்கர் தனது 17 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவரது மகன், அம்பர் தல்வால்கர், இந்தியாவின் சுகாதாரச் சங்கத்தின் முக்கிய சங்கிலியான தல்வல்கர்கர் என்ற நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர். நடிகை சுலேகா தல்வால்கரை அம்பர் திருமணம் செய்து கொண்டார். [4] தொலைக்காட்சி நடிகையான பூர்ணிமா தல்வால்கர் சுமிதாவின் மற்றொரு மருமகளாவார்.
2010ஆம் ஆண்டில் சுமிதா தல்வால்கர் சூல்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வேதிச்சிகிச்சை பெற்று வந்தார். [5] [6] இவர் தனது 60வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் மும்பையின் ஜாஸ்லோக் மருத்துவமனையில் 2014 ஆகத்து 6 அன்று இறந்தார். [7] [8]