சுய தகவல்கள் | |||
---|---|---|---|
பிறந்த நாள் | 5 சூலை 1994 | ||
பிறந்த இடம் | புளியங்குடி, தமிழ்நாடு, இந்தியா | ||
ஆடும் நிலை(கள்) | நடுக்கள வீரர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | புதுவை யூனிகார்ன்ஸ் | ||
எண் | 14 | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2016–2017 | ஜேப்பியார் நிறுவனம் | ||
2017–2018 | இந்திரா காந்தி ஏஸ்&இ | ||
2018–2022 | சேது அணி | ||
2022–2023 | இலார்ட் எப்ஏ கொச்சி | ||
2023–2024 | இலிபர்ட்டி லேடீஸ் அணி | ||
2024– | புதுவை யூனிகார்ன்ஸ் அணி | 2 | (0) |
பன்னாட்டு வாழ்வழி | |||
2016–2022 | இந்திய மகளிர் தேசிய அணி | 8 | (2) |
மேலாளர் வாழ்வழி | |||
2024– | புதுவை யூனிகார்ன்ஸ் (உதவியாளர்) | ||
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. |
சுமித்ரா காமராஜ்' (Sumithra Kamaraj) (பிறப்பு: ஜூலை 5,1994) இந்தியவைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்தாட்ட வீரரும் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளரும் ஆவார். இவர் இந்திய மகளிர் லீக் 2 இல் புதுவை யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இவர் புதுவை யூனிகார்ன்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராகவும் உள்ளார். இந்திய மகளிர் லீக்கில் சேது அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர், 2020 ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிப் போட்டி இந்திய மகளிர் தேசிய கால்பந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2]
சுமித்ரா தனது தோழி சந்தியா ரங்கநாதனுடன் தமிழ்நாட்டில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்தார். அங்கு இவருக்கு கால்பந்து மீது ஆர்வம் ஏற்பட்டது.[2][3] கடலூர் புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். பின்னர், இருவரும் இந்தியாவுக்காக விளையாடினர். தற்போது கடலூரில் வசிக்கிறார். [4]
தனது 8 ஆம் வகுப்பில், 14 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2016-17 இல், பன்னாட்டு கால்பந்து போட்டிகளின் தொடக்க விளையாட்டில் ஜேப்பியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் அணிக்காக விளையாடினார். 2018 ஆம் ஆண்டில், இவர் சேது அணியில் சேந்தார். 2019 ஆம் ஆண்டில், காத்மாண்டுவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடினார். அங்கு இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. ஏப்ரல் 2022 இல், எகிப்து மற்றும் ஜோர்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாட இந்திய அணியின் ஒரு பகுதியாக இவர் சுற்றுப்பயணம் செய்தார்.[5]