சுராசந்த்பூர் மாவட்டம் | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | மணிப்பூர் |
மாவட்டம் | சுராசந்த்பூர் |
பெயர்ச்சூட்டு | மணிப்பூர் மன்னர் சுராசந்த் சிங் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மணிப்புரியம்[1] |
• வட்டார மொழி | குகி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 795128[2] |
தொலைபேசி குறியீடு | 03874[3] |
வாகனப் பதிவு | MN 02 |
சுராசந்த்பூர் (Churachandpur), வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தின் தெற்கில் அமைந்த சுராசந்த்பூர் மாவட்டம் மற்றும் சராசந்த்பூர் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். மணிப்பூர் மன்னர் சுராசந்த் சிங் நினைவாக இந்நகரத்திற்கு இந்நகரத்திற்கு சுராசந்த்பூர் எனப்பெயரிடப்பட்டது.[4][5]
இந்நகரத்தில் 5 ஏப்ரல் 2023 அன்று மெய்தெய் மக்கள் மற்றும் குகி மக்கள் இடையே மோதல்களை கட்டுப்படுத்த காவல்துறையில் சுடப்பட்டு 4 பேர் இறந்தனர்.[6]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுராசந்த்பூர் வருவாய் வட்டத்தின் மக்கள் தொகை 1,74,138 ஆகும். அதில் ஆண்கள் 87,542 மற்றும் பெண்கள் 86,596 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.24% ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 989 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 74.67% ஆக உள்ளது. பட்டியல் சமூகத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் முறையே 0.23% மற்றும் 91.33% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் கிறித்தவர்கள் 91.43%, இந்துக்கள் 5.79%, இசுலாமியர் 0.84%, பிறர் 1.76% ஆகவுள்ளனர்.[7] இங்குள்ள மக்களில் மணிப்புரியம் மற்றும் குக்கி பழங்குடியின மொழிகளைப் பேசுகின்றனர்.