சுரேசு தத்தா Suresh Dutta | |
---|---|
பிறப்பு | பரித்பூர், கிழக்கு வங்காளம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
பணி | பொம்மலாட்டக் கலைஞர் |
அறியப்படுவது | பொம்மலாட்ட நாடகம் |
பெற்றோர் | சசி பூசன் தத்தா மற்றும் சிசுபாலா தத்தா |
வாழ்க்கைத் துணை | திரிப்டிகானா தத்தா |
விருதுகள் | பத்ம சிறீ, சங்கீத நாடக அகாடமி விருது |
சுரேசு தத்தா (Suresh Dutta) என்பவர் ஓர் இந்திய பொம்மலாட்ட கலைஞராவார். நாடக ஆளுமையான இவர் 1973 ஆம் ஆண்டு கொல்கத்தா பொம்மலாட்ட நாடகக் குழுவை நிறுவினார்.[1] பிரித்தானிய இந்தியாவின் பிரிக்கப்படாத வங்காளத்திலிருந்த பரித்பூர் நகரில் தத்தா பிறந்தார். யாத்ரா என்ற நாட்டுப்புற நாடகக்கலை முன்னோடி பானி பூசனிடம் நாடகக் கலை மற்றும் பாலகிருட்டிண மேனனிடம் கதகளி பயிற்சிகளைப் பெற்றார். புகழ்பெற்ற இசைமேதை உதயசங்கரிடம் கூட்டிணைவு பாணி நடன வகை நடனமாடவும் கற்றுக் கொண்டார்.[2] உருசிய பொம்மலாட்ட மேதை செர்கே ஒப்ராசுட்சோவிடம் பொம்மலாட்டம் கற்பதற்கு 1962 ஆம் ஆண்டு உருசியாவிற்குச் செல்வதற்கு முன்பு பரதநாட்டியம் மற்றும் மணிப்பூரி ஆகியவற்றையும் கற்றுக்கொண்டார்.[2]
1963 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய தத்தா பாலகிருட்டிண மேனனின் உத்தரவின் பேரில், குழந்தைகள் நடன அரங்கில் உதவி நடன இயக்குநராக சேர்ந்தார். இங்கு ஆடை அலங்கார வடிவமைப்பில் ஈடுபட்டார். பத்தாண்டுகளுக்குப் பின்னர் தத்தா மனைவி தேவி மற்றும் ஒத்த எண்ணங்கொண்ட கலைஞர்கள் சிலருடன் சேர்ந்து தனது சொந்த பொம்மலாட்ட நாடகக் குழுவான கொல்கத்தா பொம்மலாட்ட நாடகக் குழுவைத் தொடங்கினார்.[3] அலாதின் நாடகத்துடன் தொடங்கிய இந்த குழு தொடர்ந்து இராமாயணம், சீதா, குலாபோ ஆர் சிட்டாபோ மற்றும் நோட்டுன் இயீபன் உள்ளிட்ட 3,000 நிகழ்ச்சிகளை நடத்தியது.[4] தத்தாவிற்கு 1987 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது.[5] பொம்மலாட்டத்திற்கான பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2009 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை சுரேசு தத்தாவிற்கு வழங்கி சிறப்பித்தது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)