சுரேந்திரநாத் (1926[1] - 9 ஜூலை 1994) பஞ்சாப் ஆளுநராக ஆகஸ்ட் 1991 முதல் ஜூலை 1994 வரை இருந்தார். இவர் நவம்பர் 1993 முதல் ஜூலை 1994 வரை இமாச்சலப் பிரதேச ஆளுநராக கூடுதல் பொறுப்பில் இருந்தார். இவர், அவர் இந்தியக் காவல் பணி அதிகாரியாக இருந்தார்.[2][3][4] இவர் ஆளுநராக இருந்தபோது ஒரு விமான விபத்தில் இறந்தார். இவரது தந்தை மகாசே ராஜ்பால், 1920களில் பஞ்சாப்பில் ஆர்ய சமாஜத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த மோதலின் போது வெளியிடப்பட்ட ஒரு புத்தகமான இரங்கிலா ரசூல் என்ற புத்தகத்தின் ஆசிரியராவார்.[5] சர்ச்சைக்குரிய புத்தகம் இசுலாமிய தீர்க்கதரிசி [[முகம்மது நபி|முகம்மதுவின் திருமணங்கள் மற்றும் பாலியல் வாழ்க்கை சம்பந்தப்பட்டது.[6]