சுரையா முல்தானிகர் | |
---|---|
பிறப்பு | சுரையா முல்தானிகர் 1940[1] முல்தான், பஞ்சாப், பாகிஸ்தான்}}, பிரித்தானிய இந்தியா[1] |
பணி | நாட்டுப்புறப் பாடகி, பின்னணிப் பாடகி, குரலிசைக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1955 முதல் தற்போது வரை |
பிள்ளைகள் | முகமது அலி (ஐக்கிய இராஜ்ஜியத்தைச் சோ்ந்த மருத்துவா்) ருகாய்யா சஜித் ரம்சான் அலிi ஹைஸ்தா ராபியா ஆலியா Rரஹத் பனோ (ரஹத் முல்தானிகார்) |
சுரையா முல்தானிகர் ( Urdu: ثُریّا مُلتانِیکر ),(பிறப்பு 1940 ) பாகிஸ்தான் நாட்டின் முல்தானில் பிறந்த பிரபல நாட்டுப்புறப் பாடகி ஆவார். [2] பெரும்பாலும் இவரது பாகிஸ்தானிய நாட்டுப்புற பாடல்களுக்காக பெயர் பெற்றவர். இவா் பாரம்பரிய இசை, பகுதி பாரம்பரிய இசை, கஜல், நாட்டுப்புற பாடல்கள் [1] மற்றும் திரைப்படப பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பாடல்களைப் பாடும் திறன் படைத்தவராவார்.
சுரையா முல்தானிகரின் ஆரம்பகால குழந்தை பருவ ஆசை ஒரு பாடகியாக சிறந்து விளங்க வேண்டும் என்பதாகும். இருப்பினும் அவரது குடும்பத்தில் உள்ள எவருக்கும் சுரையாவுக்கு இசையைக் கற்பிக்கவோ அறிவுரை கூறவோ முடியவில்லை. எனவே தனது குழந்தைப் பருவத்தில், திரைப்படப் பாடல்களைக் கேட்டு, அவற்றின் தாளங்களையும் பாடல்களையும் தானே பாடி தனக்குத் தானே கற்றுக் கொள்ளத் தொடங்கினார். பின்னர் தில்லி கரானாவின் பாரம்பரிய இசை நிபுனரும் சாரங்கி இசைக் கலைஞருமான குலாம் நபி கான் என்பவரிடம் முறையான இசைப் பயிற்சியை மேற்கொள்ள சீடர் ஆனார். . [1] [3]
முல்தானிகருக்கு மொத்தம் 7 குழந்தைகள் உள்ளனர்.(மூத்தவர் முதல் இளையவர் வரை): முஹம்மது அலி (இவா் இங்கிலாந்தில் எலும்பியல் மருத்துவராகப் பணி புரிகிறார்) ருகையா சஜ்ஜாத்; ரம்ஜான் அலி, ஷைஸ்டா, ரபியா, ஆலியா மற்றும் ரஹத் பானோ. [4] அவரது இளைய மகள் ரஹத் பானோ முல்தானிகரும் அவரது தாயைப் போலவே ஒரு நாட்டுப்புற பாடகி ஆவார்.. [5]
பாகிஸ்தானின் அரசு வானொலியான ரேடியோ பாகிஸ்தானில் தனது 15 ஆவது வயதில், பிரபல மூத்த பாகிஸ்தான் இசையமைப்பாளர்களான நியாஸ் உசேன் ஷமி மற்றும் அப்துல் ஹக் குரேஷி ஆகியோரின் பாடல்களைப் பாடினார். [5] [4] பாடகியாக தனது வாழ்க்கையில், ரோஷன் அரா பேகம், ஷாம் சௌராசியா காரனா பாடகர் உஸ்தாத் சலமத் அலிகான், பாட்டியாலா கரானாவின் படே ஃபதே அலி கான் மற்றும் மெஹ்தி ஹாசன் ஆகியோரின் படைப்புகள் இருந்தும் பாடல்களிலிருந்தும் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
பின்னணி பாடகராக சுரையா முல்தானிகரின் இசை வாழ்க்கை குறுகிய காலமே நீடித்து இருந்தது. 1966 ஆம் ஆண்டு வெளிவந்த பாகிஸ்தான் திரைப்படமான <i>பட்னம்</i> இல் டீபோ பட்டாச்சார்யாவின் என்பவரின் இசையில் மஸ்ரூர் அன்வர் என்ற பாடராசிரியர் எழுதிய "பரே பீ முராவத் ஹை யே ஹுஸ்ன் வலே, கஹின் தில் லகானே கி கோஷிஷ் நா கர்ணா", என்ற இவரது பாடல் மூலம் பரவலான அங்கீகாரத்தைப் பலரது பாராட்டுகளையும் பெற்றார். [4] [3]
சுரையா முல்தானிகர் கீழ்கண்ட பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். 1959 ஆம் ஆண்டு கோல்டன் விருது [6] 1960 ஆம் ஆண்டு சட்டா காங் விருது , 1964 ஆம் ஆண்டு நிகர் விருது , 1975-1980 ஆம் ஆண்டுகளில் குலாம் ஃபரீத் விருதும், 1982 ஆம் ஆண்டு ஜஷ்ன்-இ-ஃபரீத் விருதும், 1981-1982 ஆம் ஆண்டுகளில் ஷேர்-இ-மஷ்ரிக் விருதும் 1986 ஆம் ஆண்டும் பிரைட் ஆஃப் பெர்ஃபாமன்ஸ் விருதும் [1] 2000 ஆம் ஆண்டு ஷாபாஸ் விருதும், 2002 ஆம் ஆண்டு குலாம் ஃபரீத் விருதும் 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஜனாதிபதியால் சீதாரா-இ-இம்தியாஸ் விருதும் வழங்கப்பட்டது.