சுரோபி
سروبي | |
---|---|
ஆள்கூறுகள்: 34°35′23″N 69°45′45″E / 34.58972°N 69.76250°E | |
நாடு | ஆப்கானித்தான் |
மாகாணம் | காபுல் மாகாணம் |
மாவட்டம் | சுரோபி மாவட்டம் |
ஏற்றம் | 3,274 ft (998 m) |
நேர வலயம் | ஒசநே+04:30 |
சுரோபி ( Surobi ) என்பது ஆப்கானித்தானின் காபுல் மாகாணத்தில் உள்ள சுரோபி மாவட்டத்தின் ஒரு நகரமும் மையமுமாகும். இது காபுல் ஆறு, பன்சிர் ஆறுகள் சேருமிடத்தில் அமைந்துள்ளது. சுரோபி 34°35′23″N 69°45′45″E / 34.5897°N 69.7625°E காபுல் மற்றும் ஜலாலாபாத் இடையே 998 மீ உயரத்தில் அமைந்துள்ளது. 2007-இல் இந்த ஊரின் மக்கள் தொகை 22,000-க்கும் அதிகமாக இருந்தது.
இது 1987 முதல் 1995 வரை ஆப்கானித்தானின் பொதுவுடைமை அரசாங்கம் மற்றும் அவர்களின் நெருங்கிய கூட்டாளியான சோவியத் ஒன்றியத்தை எதிர்த்துப் போராடுவதற்குப் பொதுவாக அறியப்பட்ட எசுபி இசுலாமி என்ற இசுலாமிய அமைப்பின் கோட்டையாக இருந்தது. இந்த அமைப்பின் தளபதி பரியாதி சர்தாத் இந்த ஊரை தனது தலைமையகமாகக் கொண்டு மக்களை சித்திரவதை செய்தார். பின்னர் அவர் செய்த குற்றங்களுக்காக இலண்டனில் வழக்குத் தொடரப்பட்டது. காபுல் மாகாணத்தில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அமைப்பின் மூலம் ஆப்கானித்தானில் அமைக்கப்பட்ட சர்வதேச பாதுகாப்பு உதவிப் படையின் பாதுகாப்பிலிருந்த ஒரே மாவட்டமாகும்.[1]