சுர்சித் சிங் சந்தவாலியா | |
---|---|
பஞ்சாப் ஆளுநர் | |
பதவியில் 7 பிப்ரவரி 1983 – 21 பிப்ரவரி 1983 | |
முன்னையவர் | மாரி சன்னா ரெட்டி |
பின்னவர் | ஆனந்த் பிரசாத் சர்மா |
சுர்சித் சிங் சந்தவாலியா (Surjit Singh Sandhawalia)(27 சூலை 1925 - 16 நவம்பர் 2007) என்பவர் ஓர் இந்திய நீதிபதி ஆவார். இவர் சூலை 1978 முதல் நவம்பர் 1983 வரை பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். இவர் பிப்ரவரி 1983-ல் பஞ்சாபின் ஆளுநராக இருந்தார்.[1][2]
சந்தவாலியா 1983 முதல் 1987 வரை பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்தார்.