சுறா (திரைப்படம்)

சுறா
சுறா
இயக்கம்எஸ். பி. இராஜ்குமார்
தயாரிப்புசங்கிலி முருகன் , கலாநிதி மாறன்
கதைஎசு. பி. இராச்குமார்
இசைமணி சர்மா
நடிப்பு
ஒளிப்பதிவுஎம். எசு. பிரபு
என். கே. ஏகாம்பரம்
படத்தொகுப்புஇடான் மேக்சு
கலையகம்முருகன் சினி ஆர்ட்சு
விநியோகம்சன் படங்கள்
வெளியீடுஏப்ரல் 30, 2010 (2010-04-30)
ஓட்டம்167 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

சுறா (Sura) என்பது 2010ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் எசு. பி. இராச்குமாரின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2] சுறா விசயின் 50ஆவது திரைப்படமாகும். சங்கிலி முருகனால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் சன் படங்களால் வழங்கப்பட்டு, பார்வையாளர்களிடத்திலிருந்து எதிர்மறையான திறனாய்வுகளைப் பெற்றுக் கொண்டது.[3]. இத்திரைப்படம் இணையத் திரைப்படத் தரவுத்தளத்தின் பயனர் கருத்துக்கணிப்பின் படி கடைசி நூறு இடங்களுள் 36ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.[4] இந்தத் திரைப்படம் சோட்டா மும்பை என்ற மலையாளப் படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.[5] இந்த படம் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் என்பதால் அவர்களுக்கு சாட்டிலைட் உரிமையை இலவசமாக பெற்று தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கதைக்கரு

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சுறா திரைப்படத்தின் கதை தமிழ்நாட்டின் கரையோரப் பகுதியில் உள்ள ஊரான யாழ் நகரில் இடம்பெறுகிறது. சுறாவும் (விசய்) அம்பர்லாவும் (வடிவேலு) யாழ் நகரிலேயே பிறந்து வளர்கின்றனர். வளர்ப்பு நாய் இறந்ததாக நினைத்துக் கொண்டு, கவலையில் தற்கொலை செய்ய முயலும் பூர்ணிமாவைக் (தமன்னா) காப்பாற்றுகிறார் சுறா.

சுறாவும் பூர்ணிமாவும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்குகிறார்கள். கதை நகர்ந்து கொண்டிருக்கும்போது, அமைச்சர் சமுத்திர இராசா (தேவு கில்) மீனவர்கள் வாழும் நிலத்தைக் கைப்பற்ற நினைக்கிறார். ஆனால், அதனைத் தடுத்து நிறுத்துகிறார் சுறா. தனது பலத்தைப் பயன்படுத்திச் சுறாவை அழிக்க நினைக்கிறார் சமுத்திர இராசா. ஆனாலும் தன்னந்தனியாகவே சமுத்திர இராசாவையும் அவரது குழுவினரையும் எதிர்த்து வெற்றி கொள்கிறார் சுறா.[6]

நடிகர்கள்

[தொகு]
நடிகர் கதைமாந்தர்
விசய் சுறா
தமன்னா பூர்ணிமா
தேவு கில் சமுத்திர இராசா
வடிவேலு அம்பர்லா
சிறீமன் தண்டபாணி
இரியாசு கான் தாசு
சுசாதா சுறாவின் தாய்
மதன் பாபு மதன் பாபு
இராதா இரவி மாதா கோயில் அருட்தந்தை
இளவரசு

பாடல்கள்

[தொகு]
சுறா
பாடல்
மணி சர்மா
வெளியீடுமார்ச்சு 29, 2010 (2010-03-29)
மணி சர்மா காலவரிசை
'மாஞ்சா வேலு
(2010)
சுறா 'கொதிமுக்க
(2010)
இலக்கம் பாடல் பாடகர்(கள்) நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்
1 தஞ்சாவூர் ஜில்லாக்காரி ஏமச்சந்திரா, சைந்தவி 05:21 நா. முத்துக்குமார்
2 நான் நடந்தால் அதிரடி நவீன், சோபா சந்திரசேகர், சனனி மதன் 04:35 கபிலன்
3 வெற்றிக் கொடி ஏத்து இரஞ்சித்து, முகேசு 05:21 வாலி, எசு. பி. இராசகுமார்
4 வங்கக் கடல் எல்லை நவீன், மாலதி 04:45 கபிலன்
5 சிறகடிக்கும் நிலவு கார்த்திக்கு, இரீத்தா 05:29 சினேகன்
6 தமிழன் வீரத் தமிழன் இராகுல் நம்பியார் 03:47 கபிலன்
[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சுறா (2010) (ஆங்கில மொழியில்)
  2. "சோட்டா மும்பை... சுறா... 'தல': ஒரு 'எஃப்ஐஆர்'!". Archived from the original on 2014-05-01. பார்க்கப்பட்ட நாள் 2012-04-30.
  3. விஜய் நடிக்கும் 'சுறா' திரைப்படத்தை வாங்கிவிட்டது சன் பிக்சர்ஸ்.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. இணையத் திரைப்படத் தரவுத்தள வரிசைப் பட்டியல்கள்: இணையத் திரைப்படத் தரவுத்தளம் கடைசி 100 (ஆங்கில மொழியில்)
  5. "ஏப்ரலில் சுறா...!-சன் அறிவிப்பு". Archived from the original on 2020-11-26. பார்க்கப்பட்ட நாள் 2012-04-30.
  6. சுறா-ஒரு பழக்கமான மீன் (ஆங்கில மொழியில்)
  7. சுறா (2010) (ஆங்கில மொழியில்)