சுற்றுச்சூழல் மண் அறிவியல் என்பது மனிதர்களுக்கும் மட்கோளம், உயிர்க்கோளம் , பாறைக்கோளம் , நீர்க்கோளம், வளிமண்டலத்துக்கும் இடையிலான ஊடாட்டங்களைப் பற்றிய ஆய்வு ஆகும். சுற்றுச்சூழல் மண் அறிவியல் பின்வருவனவற்றை உள்ளடக்கிய புலத்தின் அடிப்படை, பயன்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியதாகும். இடைநீரகங்கள், மேற்பரப்பு நீர் தரம் - வடோஸ் மண்டல செயல்பாடுகள், கழிவு வடிகால் களப்புல மதிப்பீடு,ம் செயல்பாடும், கழிவுநீரின் நில தூய்மிப்பு, புயல் நீர், அரிப்புக் கட்டுப்பாடு - உலோகங்களாலும் பூச்சிக்கொல்லிகளாலும் மண் மாசுபடுதல், மண்ணின் மாசுநீக்கம், அழிவநிலங்களை மீட்டெடுப்பது - மண் தரமிறக்கம், ஊட்டச்சத்து மேலாண்மை - மண்ணிலும் நீரிலும் நச்சுயிரிகள், குச்சியிரிகளின் இயக்கம், உயிரியல் மறுசீராக்கம், தீங்கான மாசுபடுத்திகளை சீரழிக்கக்கூடிய மண் நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கான மூலக்கூறு உயிரியல், மரபணு பொறியியலின் பயன்பாடு, நிலப் பயன்பாடு, புவி வெப்பமடைதல், அமில மழை, மனித உருவாக்க மண் ஆய்வு,. சுற்றுச்சூழல் மண் அறிவியலில் செய்யப்படும் பெரும்பாலான ஆராய்ச்சிகளின் படிமங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் வழியாக உருவாக்கப்படுகின்றன.[1][2]