சுலபா ஆர்யா | |
---|---|
ஆர்யா 2013-இல் | |
பிறப்பு | 15 சூலை 1950[1] |
மற்ற பெயர்கள் | ஆர்யா |
பணி | நடிகை |
அறியப்படுவது | குணச்சித்திர நடிகை |
வாழ்க்கைத் துணை | இசான் ஆர்யா (இற. 1996) |
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் | ரமேஷ் பெஹ்லா (மருமகள்)[2] |
சுலபா ஆர்யா (Sulabha Arya, பிறப்பு:15 சூலை 1950) இந்தி, மராத்தி திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகத் துறையிலும் பணியாற்றும் இந்திய நடிகையாவார். இவர் மறைந்த மூத்த இந்திய ஒளிப்பதிவாளர் இசான் ஆரியாவின் மனைவியும், ஒளிப்பதிவாளர் சமீர் ஆர்யா, நடிகர் சாகர் ஆரியாவின் தாயுமாவார்.[3] சசுரல் கெண்டா பூல் படத்தில் சாந்தி மாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். சியாம் பெனகலின் அமராவதி கி கதையேன் படத்திலும் இலட்சுமம்மாவாக இவர் நடித்தார்.
ஆர்யா 1984இல் ஒளிபரப்பான இந்தியத் தொலைக்காட்சித் துறையின் முதல் சூழ்நிலை நகைச்சுவை நிகழ்ச்சியான யே ஜோ ஹை ஜிந்தகியின் நடிகைகளுள் ஒருவராக இருந்தார்.[4] 2003ஆம் ஆண்டு நாடகத் திரைப்படமான கல் ஹோ நா ஹோவில் காந்தா பென் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.[5] சப் தொலைக்காட்சியில் யெஸ் பாஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் மாமியார் வேடத்தில் நடித்தார். இவர் கடைசியாக செட் சாப்-இன் மேடம் சர் இல் சாய்ரா பேகமாக நடித்துள்ளார்.
ஆர்யா, மகாராட்டிராவைச் சேர்ந்த இசான் ஆரியாவை (இர்சத் அகசான்) மணந்தார். இவரது மகன் சமீர் ஆர்யா (ரமேஷ் பெஹ்லாவின் மகள் சிருஷ்டி பெகலை மணந்தார்). கோய்லா (1997) கோய்... மில் கயா (2003), சுடல் வடாலா (2013) போன்ற படங்களின் ஒளிப்பதிவிற்காகப் பெயர் பெற்றவர்.[6][7]
|