சுலேகா உசேன் | |
---|---|
![]() | |
பிறப்பு | 1 சனவரி 1930 மட்டாஞ்சேரி, கொச்சி, இந்தியா |
இறப்பு | 15-07-2014 வடுத்தளை, கொச்சி | (அகவை 84)
தேசியம் | இந்தியா |
பணி | எழுத்தாளர் |
சுலேகா உசேன் (Sulekha Hussain)(1 சனவரி 1930-15 சூலை 2014) இந்தியாவைச் சேர்ந்த பாராட்டப்பட்ட உருது நாவலாசிரியர் ஆவார். இவரது பேத்திகளில் ஒருவரான நிமி பாரூக், கனடிய குடிமகனான யாசர் முகமது அலி ஜின்னாவை மணந்து, தற்போது டொராண்டோவில் வசிக்கிறார். உசேன் பல நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். 2012-ஆம் ஆண்டு மத்தியக் கலாச்சார விவகார அமைச்சகத்தால் உருது மொழியில் ஆய்வு நிதி வழங்கும் குழுவில் இவர் பரிந்துரைக்கப்பட்டார்.
சுலேகா உசேன் 1930ஆம் ஆண்டு இந்தியாவின் கேரளாவின் மட்டஞ்சேரியில் கட்சி மேமன் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது இளம் வயதிலேயே பெற்றோரை இழந்து, தனது தாத்தா ஜானி சேட்டால் வளர்க்கப்பட்டார். இவர் 4ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். கொச்சியின் மட்டாஞ்சேரியில் உள்ள ஜனானா மதரேசாவில் (ஆசியா பாகி மதரேசா) படித்தார். உருது மொழியில் பல நாவல்கள், சிறுகதைகளை இவர் வெளியிட்டார். இவை உருது வட்டாரங்களில் பாராட்டப்பட்டன.[1] இவரது படைப்புகள் பாக்கித்தான், வங்களாதேசம், மத்திய கிழக்கு, வட இந்திய மாநிலங்களில் ஏராளமான வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. இவருடைய நாவல்கள் மேரே சனம், ராஹ் அகேலி மற்றும் ஆபா ஆகியவை பிரபலமான படைப்புகள்.[2]
நாவல்கள்