சுலேகா தாவுத், (Zulekha Daud) சுலேகா மருத்துவமனை ஐக்கிய அரபு அமீரகம் உட்பட அலெக்சிஸ் பல்நோக்கு மருத்துவமனை, இந்தியா மற்றும் சுலேகா கல்லூரிகள், இந்தியா, சுலேகா நலவியல் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார்.[1] அவர் 1992 இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றும் 2016 இல் இந்தியாவில் சுலேகா மருத்துவமனைகளை நிறுவினார். மருத்துவர் . தாவூத், இந்தியாவின் மகாராட்டிராவின் நாக்பூரைச் சேர்ந்தவர், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பரவலாக அறியப்பெற்ற மருத்துவர், தொழில்முனைவோரான இவர், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த கௌரவ விருதான பிரவாசி பாரதிய சம்மான் விருதினை 2019 ஆம் ஆண்டில் பெற்றார். பரோபகார மற்றும் தொண்டு பணிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய தனிநபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது . இந்தியாவின் வாரணாசியில் நடைபெற்ற விழாவில் 23 ஜனவரி 2019 அன்று மாண்புமிகு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களால் இவருக்கு விருது வழங்கப்பட்டது.
அவரது ஐந்து தசாப்த கால மதிப்புமிக்க பங்களிப்புகளுக்கு நன்றி மற்றும் பாராட்டு கடிதத்தை வழங்கினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதாரத் துறை மற்றும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் நலன்களை உயர்த்துவதற்கான அவரது அயராத முயற்சிகளுக்காக, சேக் அப்துல்லா பின் சயீத் அல் நகியான், வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் புதுடெல்லியில் உள்ள சுலேகா நலவியல் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் சுலேகா தாவூத்தை அங்கீகரித்து கௌரவித்தார்.ஃபோர்ப்ஸ் ,ஐக்கிய அரபு அமீரகத்தில் 100 இந்தியத் தலைவர்கள் பட்டியலில் மத்திய கிழக்கு சுகாதாரத் துறையில் இவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இவரது பெயரினை இடம்பெறச் செய்தது [2][3] இவருக்கு துபாய் தர விருதினை, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் வழங்கினார்.[4]
சுலேகா தாவுத் ஒரு கட்டிட தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தார்.[5] அவர் இந்தியாவின் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவம், இளங்கலை அறுவை சிகிச்சை பட்டம் பெற்றார். அவர் மகளிர் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.[6][7]
1964 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றார், அங்கு பயிற்சி பெற்ற முதல் பெண் இந்திய மருத்துவர் எனும் பெருமை பெற்றார். அவர் முதலில் அமெரிக்க குவைத் மிஷன் மருத்துவமனையில் பணிபுரிந்தார், அதே நேரத்தில் அவரது கணவர் மருத்துவர் இக்பால் தாவூத் ராஸ் அல் கைமாவில் கண் மருத்துவராக இருந்தார். 1971 இல் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்பு, ஐக்கிய அரபு அமீரகத்தில் அடிப்படை வசதிகள் மட்டுமே இருந்தன, சில பகுதிகளில் மின்சாரம் போதுமான அளவில் இல்லை.[8] அவர் தனது தொழில் வாழ்க்கையில் 10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இந்தத் துறையில் அவர் செய்த வேலையே அவளுக்கு 'அம்மா சுலேகா' எனும் பெயரைப் பெற்றுத் தந்தது.[6][9]
1992 இல் ஷார்ஜாவில் முதல் சுலேகா மருத்துவமனை அமைக்கப்பட்டது. இது 30 படுக்கை வசதியுடன் தொடங்கியது மற்றும் சுலேகாகுழு இப்போது துபாயில் உள்ள மற்றொரு மருத்துவமனையுடன் 3 மருத்துவ மையங்கள் மற்றும் மருந்தகங்களின் சங்கிலியை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தியுள்ளது.[10] இன்று, சுலேகாகுழுமம் எமிரேட்ஸில் உள்ள மிகப்பெரிய தனியார் சுகாதார வலையமைப்புகளில் ஒன்றாகும். இரண்டு மருத்துவமனைகள் மற்றும் மூன்று மருத்துவ மையங்களின் மூலம், சுலேகா குழு ஆண்டுதோறும் சுமார் 550,000 பேருக்கு சிகிச்சை அளிக்கிறது.[11]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)