சுல்தான் சைனல் அபிதீன் பல்கலைக்கழகம்

சுல்தான் சைனல் அபிதீன் பல்கலைக்கழகம்
Sultan Zainal Abidin University
Universiti Sultan Zainal Abidin
يونيۏرسيتي سلطان زين العابدين
முந்தைய பெயர்கள்
Kolej Ugama Sultan Zainal Abidin (1980-2006), Universiti Darul Iman Malaysia (2007-2010)[1][2]
குறிக்கோளுரைமனிதகுல நன்மைக்கான அறிவு
(மலாய்: Ilmu Demi Faedah Insan )
(Knowledge for the Benefit of Humanity)
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
(இசுலாமிய சமயப் பல்கலைக்கழகம்)
உருவாக்கம்26 மார்ச்சு 2005; 19 ஆண்டுகள் முன்னர் (2005-03-26)
நிதிக் கொடைRM 5,165,722[3]
வேந்தர்திராங்கானு சுல்தானா நூர் சகிரா
(Sultanah Nur Zahirah of Terengganu)[4]
கல்வி பணியாளர்
1,904 (2019)[3]
மாணவர்கள்16,124 (2023)[3]
பட்ட மாணவர்கள்2,460 (2023)[3]
அமைவிடம்
கம்போங் கோங் பாடாக், திராங்கானு, மலேசியா
Kampung Gong Badak, 21300, Terengganu, Malaysia
, , ,
5°23′44″N 103°04′58″E / 5.39556°N 103.08278°E / 5.39556; 103.08278
வளாகம்கோலா திராங்கானு (கோங் பாடாக் தலைமை வளாகம்); பத்து பூரோக் வளாகம்; br>பெசுட் (தெம்பிலா வளாகம்)
நிறங்கள்கருப்பு, சாம்பல், வெள்ளை, தங்கம்
                   
சேர்ப்புASAIHL, இசுலாமிய உலகக் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு[5]
இணையதளம்www.unisza.edu.my
Map
சுல்தான் சைனல் அபிதீன் பல்கலைக்கழகம் அமைவிடம்

சுல்தான் சைனல் அபிதீன் பல்கலைக்கழகம் (மலாய்: Universiti Sultan Zainal Abidin; ஆங்கிலம்: Sultan Zainal Abidin University என்பது மலேசியா, திராங்கானு, கோங் பாடாக் புறநகரில் உள்ள ஓர் இசுலாமியப் பல்கலைக்கழகம் ஆகும்.

இந்தப் பல்கலைக்கழகத்திற்கு கோலா திராங்கானுவில் ஒரு மருத்துவ வளாகம் (Medical Campus Kuala Terengganu); கோங் பாடாக் தலைமை வளாகம் (Gong Badak Campus); பத்து பூரோக் புறநகர்ப் பகுதியில் பத்து பூரோக் வளாகம் (Batu Buruk Campus); பெசுட் நகர்ப் பகுதியில் தெம்பிலா வளாகம் (Tembila Campus) என நான்கு வளாகங்கள் உள்ளன.

பொது

[தொகு]

இந்தப் பல்கலைக்கழகம் மலேசியாவின் உயர்கல்விக்கான 18-ஆவது பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டம் 1971 (சட்டம் 30), பிரிவு 20-இன் கீழ், தோற்றுவிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், மலேசியாவில் உயர்நிலைக் கல்விக்கான "நடைமுறை மற்றும் பயன்பாடு சார்ந்த" கற்பித்தல் மற்றும் கற்றல் முறையைப் பயன்படுத்துவதில் முன்னோடியாகக் கருதப்படுகிறது.[6][7]

இது தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள முதல் முழு அளவிலான பல்கலைக்கழகம்; "தொகுதி" கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட முதல் பல்கலைக்கழகம்; மற்றும் ஐக்கிய இராச்சியம், இலண்டன் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட மலேசியாவின் முதல் பல்கலைக்கழகம் ஆகும்.[8]

வரலாறு

[தொகு]

சுல்தான் சைனல் அபிதீன் பல்கலைக்கழகம் (UniSZA) 1980-ஆம் ஆண்டு சனவரி 1-ஆம் தேதி சுல்தான் சைனல் அபிதீன் சமயக் கல்லூரியாக (Kolej Ugama Sultan Zainal Abidin) (KUSZA) தொடங்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டு, அந்தக் கல்லூரி, புலாவ் காம்பிங்கில் உள்ள ஆஜா ஊக் (Hajah Wook Building) கட்டிடத்திற்குச் செல்வதற்கு முன்பு பத்து பூரோக் வளாகத்தில் செயல்பட்டது.

திராங்கானு மாநில சட்டமன்றத்தால் மாநில முன்வரவு 31/1981 மூலம் கல்விச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழகம் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றப்பட்டது.

சுல்தான் சைனல் அபிதீன் சமயக் கல்லூரி

[தொகு]

அதன் பின்னர், திராங்கானு, கோலா திராங்கானு, கோலா நெருசு மாவட்டம், கோங் படாக் நகர்ப்பகுதியில் 350 ஏக்கர் (1.4 கிமீ2) நிலப்பரப்பில் நிரந்தர வளாகம் கட்டப்பட்டது. சனவரி 1983 தொடக்கம், சுல்தான் சைனல் அபிதீன் சமயக் கல்லூரி அதன் முதல் வளாகத்தில் செயல்படத் தொடங்கியது.[9] முதன்முதலில் இசுலாமிய பட்டயப் படிப்பு வழங்கப்பட்டது. அதுவே தற்போது 23 பட்டயப் படிப்புத் திட்டங்கள் மற்றும் மூன்று உயர்ப் பட்டயப் படிப்பு திட்டங்கள் வரை விரிவடைந்துள்ளது.[10]

வளர்ச்சி

[தொகு]

மார்ச் 26, 2005 அன்று, சுல்தான் சைனல் அபிதீன் சமயக் கல்லூரி, சுல்தான் சைனல் அபிதீன் பல்கலைக்கழகம் (Universiti Darul Iman Malaysia) என்ற முழு அளவிலான பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்பட்டது.

பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமது படாவி, மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் புதிய பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என அறிவித்த பின்னர் சுல்தான் சைனல் அபிதீன் பல்கலைக்கழகம் தன் பல்கலைக்கழகத் தகுதியின் அடிப்படையில் பாடத் திட்டங்களைத் தொடங்கியது. 13 மே 2010-இல், முழு பல்கலைக்கழகத் தகுதிக்கு தரம் உயர்த்தப்பட்டது.

நிதி நிலை

[தொகு]

ஒரு முழு பொதுப் பல்கலைக்கழகமாக இயங்கும் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு, அதன் நிதியுதவிகள் பெரும்பாலும் மலேசிய நடுவண் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கின்றன. சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டிற்கு 2006 தொடங்கி 2010 வரை மலேசிய அரசாங்கத்தால் RM 417 மில்லியன் ரிங்கிட் (US$ 137 மில்லியன் அமெரிக்க டாலர்) வழங்கப்பட்டது.[11]

பின்னர் 2011 -2015 ஆண்டுகளுக்கு இடையில் RM 420 மில்லியன் ரிங்கிட் (US$ 138 மில்லியன் அமெரிக்க டாலர்) நிதியை மலேசிய அரசாங்கம் வழங்கியது. ஏப்ரல் 2009-இல் திராங்கானு மாநில அரசாங்கத்தால் ஆய்வு பணிகளுக்காக RM 2.2 மில்லியன் (US$ 721 000 அமெரிக்க டாலர்) வழங்கப்பட்டது.[12][13]

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Varsity gets new name". Star Publications (M) Bhd - The Star Online Newspapers. பார்க்கப்பட்ட நாள் 14 September 2012.
  2. "Rebranding of Higher Educational Institutions in Malaysia". International Journal of Business and Management, Vol. 4, No. 9, September 2009. பார்க்கப்பட்ட நாள் 15 September 2012.
  3. 3.0 3.1 3.2 3.3 "UniSZA – Universiti Sultan Zainal Abidin: Ilmu Demi Faedah Insan". Universiti Sultan Zainal Abidin. Gong Badak Campus. பார்க்கப்பட்ட நாள் 25 July 2024.
  4. "Knowledge is key". Star Publications (M) Bhd - The Star Online Newspapers. பார்க்கப்பட்ட நாள் 14 September 2012.
  5. [1] பரணிடப்பட்டது 26 சனவரி 2005 at the வந்தவழி இயந்திரம்
  6. "Universities and University Colleges Act 1971" (PDF). Attorney General's Chambers of Malaysia. Archived from the original (PDF) on 12 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Universities and University Colleges (Variation of, and Addition to, the Constitution)(Universiti Sultan Zainal Abidin) Order 2010" (PDF). His Majesty's Government Gazette - Federation of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 15 September 2012. [English version at pg. 6212]
  8. "Terengganu to get varsity modelled after University of London". Star Publications (M) Bhd - The Star Online Newspapers. பார்க்கப்பட்ட நாள் 14 September 2012.
  9. "Upacara Perletakan Batu Asas Kolej Ugama Sultan". National Archives of Malaysia. Archived from the original on 21 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 11 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Bab 3 - Pengajian Syariah di KUSZA" (PDF). The University of Malaya Students' Repository. பார்க்கப்பட்ட நாள் 12 September 2012. [in Malay Language]
  11. "Speech by the Prime Minister, Dato' Seri Abdullah Haji Ahmad Badawi in Parliament - Ninth Malaysia Plan (2006-2010)" (PDF). Parliament of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 15 September 2012.
  12. "Speech by the Prime Minister, Dato' Seri Mohd Najib Abdul Razak in Parliament - Ninth Malaysia Plan (2006-2010)" (PDF). Office of The Prime Minister of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 15 September 2012.
  13. "RM200j naik taraf kemudahan UniSZA". Utusan Melayu (M) Berhad - Utusan Online Newspapers. பார்க்கப்பட்ட நாள் 15 September 2012.[in Malay Language]

வெளி இணைப்புகள்

[தொகு]