சுல்தான்கஞ்ச் புத்தரின் செப்புச் சிலை | |
---|---|
![]() | |
ஆண்டு | கிபி 500-700 |
ஆக்கப் பொருள் | செப்பு |
இயக்கம் | குப்தர்-பாலர்களின் இடைநிலைக் காலம் |
பரிமானங்கள் | 2.3 m × 1 m (91 அங் × 39 அங்) |
இடம் | பர்மிங்காம் அருகாட்சியகம் மற்றும் கலைக் கூடம், பர்மிங்காம் |
சுல்தான்கஞ்ச் புத்தர் சிலை (Sultanganj Buddha) குப்த மற்றும் பாலப் பேரரசுகளின் இடைநிலைக் காலத்தில் கிபி 500 - 700 இடைப்பட்ட காலத்தில்[1] நிறுவப்பட்ட ஆளுயரச் செப்புச் சிலையாகும். இச்செப்புச் சிலை 2.3 மீட்டர் உயரமும், 1 மீட்டர் அகலமும், 500 கிலோ எடையும் கொண்டது. இச்செப்புச் சிலை இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தானகஞ்ச் எனும் கிராமத்தில் 1861-இல் கண்டெடுக்கப்பட்டது [2]1861-இல் சுல்தான்கஞ்ச் கிராமத்தில் பிரித்தானிய இந்தியா ஆட்சியின் கிழக்கிந்திய இரயில்வே துறையினர் இருப்புப் பாதை அமைக்கும் போது இப்புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.[3]தற்போது இந்த புத்தர் செப்புச் சிலை ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்காம் அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.