சுல்தான்பூர் | |
---|---|
சுல்தான்பூர் | |
ஆள்கூறுகள்: 26°15′30″N 82°04′20″E / 26.25833°N 82.07222°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | சுல்தான்பூர் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | சுல்தான்பூர் நகராட்சி |
ஏற்றம் | 95 m (312 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,07,640 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
• கூடுதல் அலுவல் மொழி | உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 228001 |
வாகனப் பதிவு | UP-44 |
இணையதளம் | sultanpur |
சுல்தான்பூர் (Sultanpur), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தின் அமைந்த சுல்தான்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது கோமதி ஆற்றின் கரையில் உள்ளது.[1]மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு 135 கிலோ மீட்டர் தொலைவிலும்; அயோத்திக்கு தெற்கே 65.4 கிலோ மீட்டர் தொலைவிலும் சுல்தான்பூர் உள்ளது.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வார்டுகளும், வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 1,07,640 ஆகும். அதில் ஆண்கள் 56,420 மற்றும் 51,220 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 908 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11,647 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 87.59% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 69.03%, இசுலாமியர் 29.59%, கிறித்தவர்கள் 0.26% மற்றும் பிறர் 1.64% ஆகவுள்ளனர்.[2]
லக்னோ-வாரணாசி நான்கு வழித்தட தேசிய நெடுஞ்சாலை எண் 56 மற்று இரட்டை வழித்தட தேசிய நெடுஞ்சாலை எண் 56 சுல்தான்பூர் நகரத்துடன் இணக்கிறது.
சுல்தான்பூர் சந்திப்பு இரயில் நிலையம் மாநிலத்தின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. [3]