சுழல்: த வோர்டெக்ஸ்

சுழல்: த வோர்டெக்ஸ்
வகைபரபரப்பூட்டும்
குற்றப்புனைவு
உருவாக்கம்புஷ்க கர்-காயத்ரி
எழுத்துபுஷ்கர்-காயத்ரி
இயக்கம்பிரம்மா ஜி
அனுச்சரன் முருகையன்
நடிப்பு
இசைசாம் சி. எஸ்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்8
ஒளிப்பதிவுமூக்கேசுவரன்
தொகுப்புரிச்சார்ட் கெவின்
தயாரிப்பு நிறுவனங்கள்வால்வாட்ச்சர் பிள்ம்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஅமேசான் பிரைம் வீடியோ
ஒளிபரப்பான காலம்17 சூன் 2022 (2022-06-17) –
நடப்பு

சுழல்: த வோர்டெக்ஸ் என்பது அமேசான் பிரைம் வீடியோவுக்காக புஷ்கர்-காயத்ரியால் உருவாக்கப்பட்ட தமிழ் மொழி வலைத்தொடர் ஆகும்.[1][2][3][4][5] இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானியம், போலிஷ், போர்த்துகீசியம், காஸ்டிலியன் எசுப்பானியம், இலத்தீன் அரபு மற்றும் துருக்கிய மொழிகளில் ஒலிசேர்க்கப்பட்டு துணையுரைகள் மூலம் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் இத்தொடர் வெளியானது.[6][7][8][9][10]

முதற்கோள்

[தொகு]

ஓர் இளம்பெண் காணாமல் போவதைத் தொடர்ந்து அச்சிறுநகரத்தில் இரகசியங்கள் பல வெளிவருகின்றன.

நடிகர்கள்

[தொகு]
  • துணை ஆய்வாளர் சக்கரவர்த்தியாக (சக்கரை) கதிர்
  • நந்தினியாக ஐஸ்வர்யா ராஜேஷ்
  • சண்முகமாக ஆர்.பார்த்திபன்
  • ஆய்வாளர் ரெஜினா தாமஸாக சிரேயா ரெட்டி
  • திரிலோக் வட்டேயாக ஹரிஷ் உத்தமன்
  • வடிவேலுவாக பிரேம் குமார்
  • குணாவாக இளங்கோ குமாரவேல்
  • லக்ஷ்மியாக நிவேதிதா சதீஷ்
  • தேவியாக இந்துமதி மணிகண்டன்
  • நிலாவாக கோபிகா ரமேஷ்
  • செல்வியாக லதா ராவ்
  • அதிசயமாக எஃப். ஜே
  • முகேஷ் வத்தேவாக யூசஃப் ஹுஸ்ஸெய்ன்
  • புஷ்பராஜாக நிதிஷ் வீரா
  • கோதன்டராமனாக சந்தான பாரதி
  • மனநல மருத்துவராக மேகா ராஜன்
  • ஈஷ்வரனாக பழனி முருகன்
  • மலராக சௌந்தர்யா
  • கனியாக நவ்னீத் கிருஷ்ணன்
  • மணியாக யஷ்வந்த் பாபு
  • கண்டிபனாக ஜி அஜித் குமார்
  • தீனாவாக ஹரீஷ் எஸ். எஸ்.
  • அறிவாக ஸசி குமார்
  • முத்துவாக அருண் பாண்டியன்
  • சுந்தரமாக ப்ரசன்னா பாலச்சந்திரன்
  • மருத்துவராக மோனா ககடே

அத்தியாயங்கள்

[தொகு]
எண் அசல் வெளியீட்டு தேதி
1 17 சூன், 2022[11]
துவக்கத்தில் ஒரு பெண்ணை ஒருவன் துரத்துவது போல் ஒரு காட்சி காட்டப்படுகிறது. ஊரில் மயானக் கொள்ளை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திரிலோக் வட்டே என்னும் முதன்மை செயல் அலுவலருக்கு எதிராக பணியாட்கள் நாத்திகரான சண்முகம் என்பவர் தலைமையில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். நிர்வாக இயக்குநர் திரிலோக் அவர்களைக் களையும்படி எச்சரிக்கை விடுகிறார். சண்முகம் அதனை ஒத்துக்கொள்ளாததால் காவலர்கள் தடியடி நடத்தி கூட்டத்தைக் களைக்கின்றனர். வீடு திரும்பிய சண்முகம் தனது இளைய மகளான பத்தாம் வகுப்பு படிக்கும் நிலா தேர்வில் தமிழ் உட்பட இரண்டு பாடங்களில் தேர்ச்சிபெறாததால் அவளிடம் கடுமையாக பேசுகிறார். பிறகு, அந்த தொழிற்சாலையில் தீவிபத்து என்னும் செய்தி வெளிவருகிறது. சண்முகம் விபத்து நடந்த இடம் சென்று பார்க்கையில் அங்கு முத்துசாமி என்பவர் தீக்காயம் அடைந்ததது தெரியவருகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அச்சம்பவம் தீவிபத்து அல்ல தீவைப்பு என்று காவலர்கள் கண்டறிகின்றனர். சண்முகம் வீடு திரும்பியதும் நிலா வீட்டில் இல்லை என்பது தெரிய வருகிறது. குணாவின் மனைவியின் மூலம் விடயத்தையறிந்ததும் சண்முகத்தை விட்டுச்சென்று ஆசிரமத்தில் இருக்கும் சைவக் கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்ட அவனது மனைவி தேவி வீட்டிற்கு வருகிறார். சண்முகமும் குணாவின் மனைவியும் சேர்ந்து நிலாவைத் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் சண்முகத்தை சந்தேகிக்கும் ஆய்வாளர் ரெஜினா தாமஸ் சண்முகத்தைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் செல்கிறார். நிலா காணாமல் போனதை அறிந்த ஊரைவிட்டு காதலனுடன் ஓடிப்போய் தற்போது கோவையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் சண்முகத்தின் மூத்த மகளும் சர்க்கரவர்த்தியின் பள்ளித் தோழியுமான நந்தினி சண்முகத்தை விடுவிக்குமாறு கோருகிறார்.விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள கண்காணிப்பு படக்கருவிகளின் காட்சிகளைத் துணை ஆய்வாளர் சக்கரவர்த்தி ஆராய்கையில் நிலா கடத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Trailer of 'Suzhal: The Vortex' featuring Aishwarya Rajesh, Parthiban and others, is out". The News Minute (in ஆங்கிலம்). 2022-06-08. Retrieved 2022-06-09.
  2. "Suzhal The Vortex trailer: Kathir, Aishwarya Rajesh promise a riveting thriller". The Indian Express (in ஆங்கிலம்). 2022-06-07. Retrieved 2022-06-09.
  3. "The scintillating trailer of tamil original series Suzhal – The Vortex is out now-South-indian-movies News, Firstpost". Firstpost (in ஆங்கிலம்). 2022-06-07. Retrieved 2022-06-09.
  4. V, NARAYANAN (2022-06-07). "Amazon Prime to make a splash in South India with original content". www.thehindubusinessline.com (in ஆங்கிலம்). Retrieved 2022-06-09.
  5. "'Suzhal: The Vortex' trailer promises a thrill ride". Zee News (in ஆங்கிலம்). 2022-06-08. Retrieved 2022-06-09.
  6. Remley, Hilary (2022-06-08). "'Suzhal: The Vortex' Trailer Reveals an Intense Tamil-Language Mystery". Collider (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-06-09.
  7. published, Balakumar K. (2022-06-08). "Tamil series Suzhal – The Vortex to be available in 30 languages on Prime Video". TechRadar India (in Indian English). Retrieved 2022-06-09.
  8. Whittock, Jesse; Whittock, Jesse (2022-06-07). "'Suzhal – The Vortex' Trailer: First Look At Amazon's Debut Long-Form Tamil-Language Drama Series". Deadline (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-06-09.
  9. Ramachandran, Naman; Ramachandran, Naman (2022-06-03). "Amazon Prime Video India Reveals Tamil Original 'Suzhal – The Vortex' at IIFA (EXCLUSIVE)". Variety (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-06-09.
  10. "Tamil thriller 'Suzhal – The Vortex' is made for a global audience, says Amazon". The National (in ஆங்கிலம்). 2022-06-04. Retrieved 2022-06-09.
  11. "Suzhal – The Vortex Web Series (2022) | Release Date, Review, Cast, Trailer, Watch Online at Amazon Prime Video". NDTV Gadgets 360 (in ஆங்கிலம்). Retrieved 2022-06-19.