சுவாமி தயானந்த சரசுவதி | |
---|---|
சுவாமி தயானந்த சரசுவதி | |
பிறப்பு | 15 ஆகத்து 1930 மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | இரிசிகேசம் | செப்டம்பர் 23, 2015
இயற்பெயர் | நடராசன் கோபால ஐயர் |
தேசியம் | இந்தியர் |
நிறுவனர் | அர்ச வித்யா குருகுலம் |
தத்துவம் | அத்வைதம் |
குரு | சின்மயானந்தா |
மெய்யியலாளர் |
சுவாமி தயானந்தர் அல்லது தயானந்த சரசுவதி சுவாமி(15 ஆகத்து 1930 - 23 செப்டம்பர் 2015) தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டத்தில், மஞ்சக்குடி கிராமத்தில் பிறந்தார். தயானந்தர் மரபுவழி வந்த அத்வைத வேதாந்த ஆசிரியர். சுவாமி சின்மயானந்தரிடம் 1952-ல் துறவற தீட்சை பெற்று, விஜயவாடா அருகில் உள்ள குடிவாடா எனுமிடத்தில் உள்ள சுவாமி பிரவானந்தரிடம் குருகுலக் கல்வி பயின்ற வேதாந்த மாணவர். சுவாமி தயானந்தர் 1972ஆம் ஆண்டு முதல் நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி, தொடர்ந்து அத்வைத வேதாந்த சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இவரிடம் வேதாந்தம் பயின்ற இருநூறு மாணவர்கள் தலைசிறந்த வேதாந்த ஆசிரியர்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அத்வைத வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
சுவாமி தயானந்த சரசுவதி, வேதாந்தம் மற்றும் சமசுகிருதம், யோகா பயில நான்கு பயிற்சி நிலையங்களை நிறுவினார். அவைகள்;
ஐக்கிய அமெரிக்காவில் மூன்று மாதங்களாக உடல்நலம் குறைவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த சுவாமி தயானந்த சுரசுவதி, 13 ஆகஸ்டு 2015 அன்று இந்தியாவுக்கு திரும்பி டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனது இறுதிக் காலத்தை கங்கைக் கரையில் உள்ள ரிஷிகேஷ் ஆசிரமத்தில் கழித்தார். இந்நிலையில் 23 செப்டம்பர் 2015 அன்று காலமானார். 25 செப்டம்பர் 2015 அன்று அவரது உடல் ரிஷிகேஷில் அடக்கம் செய்யப்பட்டது.[7][8][9]
சுவாமி தயானந்தரின் ஆன்மீக சேவைக்காக, 2016-ஆம் ஆண்டிற்கான பத்ம பூசண் விருது, அவரது இறப்புக்குப் பின் வழங்கப்பட்டது.[10]