சுவாமி தோப்பு | |
---|---|
கிராமம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
ஏற்றம் | 13 m (43 ft) |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 629 xxx |
Telephone code | 91-4652 |
வாகனப் பதிவு | TN-74 |
'சுவாமிதோப்பு அல்லது சாமித்தோப்பு என்பது இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் நகரத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். பழங்காலத்தில், சாத்தான்குட்டி விளை என்ற கிராமத்தின் ஒரு பகுதியாக இருந்த பூவனந்தோப்பு என்ற பெயரில் சுவாமிதோப்பு அறியப்பட்டது[1]. இது நாகர்கோவிலில் கன்னியாகுமரி சாலையில் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
இக்கிராமத்திலுள்ள சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதி அய்யாவழி, மற்றும் அய்யாவழி சமயத்தின் தலைமை பதியாக கருதப்படுகிறது. அய்யா வைகுண்டர்[2] , சாமித்தோப்பு பதி, அம்பலப்பதி, வாகைப்பதி, முட்டப்பதி, பூப்பதி என ஐந்து பதிகளை ஏற்படுத்தியுள்ளார். அந்த ஐந்து பதிகளில் புகழ் பெற்ற பதி இதுவாகும். மேலும் இப்பதி, தெட்சணாப்பதி என்றும் அழைக்கப்படும். இந்த பதியானது அனைத்து சமயங்களைச் சார்ந்த அய்யாவழி பக்தர்களும் வருகை தரும் முக்கியமான புனித இடமாகக் கருதப்படுகிறது. மதச்சார்பின்மையின் முக்கிய அம்சமாக இது விளங்குகிறது அய்யா வைகுண்டர் தவம், தியானம் செய்த முக்கிய மையமாக இந்த பதி கருதப்படுகிறது.