சுவாமி நாராயண் அக்சர்தாம் (காந்திநகர்)

காந்திநகர் சுவாமி நாராயண் அக்சர்தாம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:குஜராத்
மாவட்டம்:காந்திநகர்
அமைவு:காந்திநகர்
கோயில் தகவல்கள்
இணையதளம்:http://www.akshardham.com/gujarat/

சுவாமி நாராயண் அக்சர்தாம் (Swaminarayan Akshardham) இந்தியாவின் குஜராத் மாநிலம், காந்திநகர் மாவட்டம், காந்திநகரில் சுவாமி நாராயணுக்கு 2 நவம்பர் 1992 அன்று அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோவில் ஆகும்.[1]சுவாமி நாராயண் அக்சர்தாம் கோயில் வளாகம் 23 ஏக்கர் பரப்பளவில், 6,000 மெட்ரிக் டன் இளஞ்சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டது.[2]

இக்கோயில் வளாகம் 108 அடி உயரம், 131 அடி அகலம், 240 அடி நீளம், 97 அழகிய தூண்கள், 17 குவிமாடங்கள், 8 உப்பரிகைகள், 264 சிற்பங்கள் கொண்டது. இக்கோயில் கட்டிடக் கலை இந்து சமய [[வேதம்]வேதங்கள் அடிப்படையில் கட்டப்பட்டதால், இரும்பு போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்படவில்லை. இதன் 20 அடி நீளம் கொண்ட உத்திரங்கள் ஒவ்வொன்றும் 5 டன் எடை கொண்டது.

இக்கோயில் மூலவரான சுவாமி நாராயண் திருவுருச் சிலை, 3 அடி உயர மேடை மீது நிறுவப்பட்டுள்ளது. இக்கோயிலின் நான்கு மூலைகளில் சுவாமி நாராயணின் சீடர்களின் சனனதிகள் உள்ளது.[3]இக்கோயிலின் முதல் தளத்தில் அமைந்த விபூதி மண்டபம், தாமரை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிரசாதி மண்டபம் எனும் அடித்தளம் சுவாமி நாராயணின் வாழ்க்கையை விளக்கும் சிற்பங்களைக் கொண்டுள்ளது.

தீவிரவாத தாக்குதல்

[தொகு]

சுவாமி நாராயண் கோயிலில் 24 செப்டம்பர் 2002 அன்று மாலை முதல் 25 செப்டம்பர் 2002 காலை வரை, பாகிஸ்தான் நாட்டு லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், குண்டு வீச்சிலும் 33 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 70 பேர் காயமடைந்தனர்.[4] [5][6][7] [8] தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குஜராத் காவல் துறையினரும், தேசிய பாதுகாப்பு படையினரும் நடத்திய எதிர்தாக்குதலில், லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் சே முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் முர்துசா ஹபீஸ் யாசின் மற்றும் அஷ்ரப் அலி முகமது பரூக் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த எதிர் தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Akshardham Gandhinagar". BAPS Swaminarayan Bliss. 2003. 
  2. Makarand R. Paranjape (1 June 2013). Acts of Faith: Journeys to Sacred India. Hay House, Inc. pp. 108–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81398-35-7.
  3. "Akshardham Monument". BAPS Swaminarayan Sanstha. 1999. பார்க்கப்பட்ட நாள் 2015-03-15.
  4. GB Parliament, House of Commons. Terrorism and Community Relations: Oral and written evidence.
  5. "Terrorist Attack on Akshardham". 2002-09-25. பார்க்கப்பட்ட நாள் 2015-03-15.
  6. "Gujarat HC upholds death sentence for Akshardham attackers". The Economic Times. 2 June 2010. http://articles.economictimes.indiatimes.com/2010-06-02/news/28442247_1_pota-court-murtuza-hafiz-yasin-terror-attack. பார்த்த நாள்: 15 June 2014. 
  7. Williams, Raymond (2004). Williams on South Asian Religions and Immigration: Collected Works. England: Ashgate. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0754638561.
  8. "Temple Carnage: Terrorist Attack on Akshardham". Swaminarayan.org.

வெளி இணைப்புகள்

[தொகு]