சூத்திர நாடு (Sudra Kingdom), பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். மகாபாரத காவியத்தில் இந்நாடு குறித்து விளக்கப்பட்டுள்ளது. சூத்திர நாட்டவர்களுடன், பிற இன மக்களான தார் பாலைவனத்தால் வற்றிய சரசுவதி ஆற்றின் கரையில் வாழ்ந்த ஆபீரர்களுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது.
பீஷ்ம பருவம், அத்தியாயம் ஒன்பதில், பரத கண்டத்தின் பஞ்சாப் பகுதியின் ஆபீரர்கள், தராதரர்கள், காஷ்மீரர்கள், பட்டிகள், ஐதரேயர்கள், கிராதர்கள், தோமரர்கள், கரமஞ்சர்கள், சுரர்கள் ஆகிய இன மக்களையும் மகாபாரதம் சூத்திரர்கள் எனக் குறிப்பிடுகிறது. (மகாபாரதம் 6. 9)
இராசசூய வேள்விக்கு நிதி திரட்ட நகுலன், மேற்கு பரத கண்ட நாடுகளின் மீது படையெடுத்துச் செல்கையில், சிந்து ஆறு கடலில் கலக்கும் பகுதியில் இருந்த அசுரர்களையும், சரசுவதி ஆற்றின் பகுதிகளில் இருந்த மீன்பிடித் தொழில் செய்து கொண்டிருந்த சூத்திரர்களான ஆபிரர்களையும் வென்று திறை வசூலித்தாக மகாபாரதத்தின் சபா பருவம், அத்தியாயம் 31-இல் கூறப்பட்டுள்ளது.
தருமராசன் நடத்திய இராசசூய வேள்வியில் பங்கு கொண்ட பரத கண்டத்தின் மேற்குக் கடற்கரை பகுதியில் வாழ்ந்த சூத்திர நாட்டவர்களான சூர மன்னர்கள், தருமருக்கு தங்க அணி கலன்களையும், கலைமான்களையும் பரிசுப் பொருட்களாக வழங்கினர் (2:50).
குருச்சேத்திரப் போரில், சூத்திர நாட்டுப் படைகள் கௌரவர் அணியின் சார்பாக நின்று, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர் (7: 7) & (7:20).
சூத்திரர்களும் அபிரர்களும் வசித்த இடத்தில் சரஸ்வதி வற்றிப் போயிருந்தது. பலராமன் அந்த இடத்தைச் சென்று பார்த்தார். அவர் வசித்த பகுதியில் சரஸ்வதி வற்றிப் போனதால் அந்த இடத்திற்கு வினாசனா என்ற பெயரும் வழங்கப்பெற்றது (மஹா 9:37)