சூரஜ் வெஞ்சரமூடு | |
---|---|
2020இல் சூரஜ் | |
பிறப்பு | சூரஜ் வாசுதேவன் 30 சூன் 1976 வெஞ்சரமூடு, திருவனந்தபுரம் மாவட்டம், கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2001 முதல் தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | சுப்ரியா (2005) |
பிள்ளைகள் | 3 |
விருதுகள் |
|
சூரஜ் வாசுதேவன் (Suraj Vasudevan) (பிறப்பு 30 சூன் 1976), தொழில் ரீதியாக சூரஜ் வெஞ்சரமூடு (Suraj Venjaramoodu) என்று புகழ் பெற்ற இவர், ஓர் இந்திய திரைப்பட நடிகரும், நகைச்சுவை நடிகரும், பொழுதுபோக்குக் கலைஞரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், மேடையில் தோன்றி வருகிறார். 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2000களிலும், 2010களின் நடுப்பகுதியிலும், இவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். மேலும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை மூன்று முறை (2009, 2010, 2013) வென்றுள்ளார். இவரது பிற்கால வாழ்க்கையில், [[குணச்சித்திர நடிகர்|குணசித்திர நடிகராகவும், முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்து வெற்றி பெற்றார். பேரரியாதவர் படத்தில் நடித்ததற்காக 2014ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.[1] 2019ஆம் ஆண்டில், ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் பதிப்பு 5.25 , விக்ருதி ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.[2]
இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சிப்பாய் வெஞ்சரமூடு கே. வாசுதேவன் நாயர் , இல்லத்தரசியான விலாசினி ஆகியோரின் மூன்று குழந்தைகளில் இளைய குழந்தையாக சூரஜ் பிறந்தார்.[3] இவரை இவரது பெற்றோர்களும், உறவினர்களும் "குட்டப்பன்" என்ற பெயரில் அழைத்தனர். இவரது மூத்த சகோதரர் வி. சாஜி, இந்திய இராணுவத்தில் அதிகாரியாக இருந்தார். இவரது மூத்த சகோதரி சுனிதா வி. வி திருமணமாகி திருவனந்தபுரத்தில் குடியேறினார். இவர், தனது கல்வியை முடித்த பின்னர் இராணுவத்தில் பணியாற்ற விரும்பினார். ஆனால் மிதிவண்டியிலிருந்து விழுந்து கையை உடைத்துக் கொண்டதால் அந்த முயற்சியை கைவிட வேண்டியிருந்தது. கே. வி. எம். எல். பி. எஸ் என்பவரிடமிருந்து தனது முதன்மை கல்வியைப் பெற்றார்.[4] ஆற்றிங்கல் அரசு தொழில்நுட்ப நிறுவனத்தில் தனது இயந்திரவியல் படிப்பை முடித்த இவர், அதன்பிறகு பிரபலங்களின் குரலில் பேசுவதற்குத் திரும்பினார். கைரளி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சியான ஜகபோகாவில் இவர் நடித்தபோது இவருக்குத் திருப்பம் ஏற்பட்டது.[5]
ஒரு நகைச்சுவை நடிகராக சூரஜ் தனது பலகுரல் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களிடையே வெற்றி பெற்றன. இவர் முதலில் ஜகபோகா என்ற நிகழ்ச்சியில் தோன்றினார்.[6] இதில் பச்சன் மற்றும் தாதாசாகிப் வேடத்தில் நடித்தார். திருவனந்தபுரம் உச்சரிப்பை இவர் செயற்கையாக கேலி செய்ததற்காக பெரும்பாலும் வரவேற்கப்பட்டார். இதுவரை இவர் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், டூப்ளிகேட், தாஸ்கரா லஹாலா படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரபிகதா, இவர் விவாகிதராயால், அண்ணன் தம்பி, வெருத்தே ஒரு பார்யா, லாலிபாப், குலுமால், தி எஸ்கேப், சட்டாம்பினாடு, சகுடும்பம் சியாமளா, ஆதாமிண்டெ மகன் அபூ, பேரரியாதவர், ஆக்ஷன் ஹீரோ பிஜு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
டாக்டர் பிஜு இயக்கிய பேரரியாதவர் படத்திற்கான 61 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.[7][8]
2005 ஆம் ஆண்டில், சூரஜ் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் அருகிலுள்ள வைகுந்தம் அரங்கத்தில் சுப்ரியா என்பவரை மணந்தார். இவர்களுக்கு காசிநாதன், வாசுதேவ், கிருத்யா என மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது மகன் காசிநாதன் அண்ணன் தம்பி, தேஜா பாய் &பேமிலி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)