சூரிய தேவன் கோயில் | |
---|---|
![]() சூரிய தேவன் கோயில் | |
அமைவிடம் | |
அமைவு: | தேவ் நகரம், அவுரங்காபாத் மாவட்டம், பிகார், இந்தியா |
ஆள்கூறுகள்: | 24°39′32″N 84°26′13″E / 24.658791°N 84.437026°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | நகரா மற்றும் தமிழ் கட்டிடக் கலை |
கட்டடக் கலைஞர்: | பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டு[1] |
இணையதளம்: | [ https://surya-mandir-dev.business.site/ ] |
சூரிய தேவன் கோயில் (Deo Surya Mandir), இந்தியாவின் பிகார் மாநிலத்தில் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள தேவ் நகரத்தில் சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும். மேற்கு நோக்கி அமைந்த இக்கோயிலில்[1] சத் பூசை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.[2] நகரா, வெசரா மற்றும் தமிழ் கட்டிடக் கலைநயங்களுடன் கூடியது.[3][4]
இச்சூரிய கோயிலில் உள்ள குப்தப் பேரரசு காலத்திய 642ஆம் ஆண்டின் கல்வெட்டு சூரிய வழிபாடு குறித்துள்ளது. இக்கோயில் பொ.ஊ. 7 அல்லது 8ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[1][5] துவக்கத்தில் பௌத்தக் கோயிலாக இருந்த இதை, பக்தியார் கில்ஜியால் சிதைக்கப்பட்ட பிறகு, மன்னர் பைரவேந்திரர் இதனை சூரியக் கோயிலாகக் மாற்றினார்.[6][7]