சூரியகாந்த்

சூரியகாந்த்
பிறப்புபக்கிரி
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகர், தொலைக்காட்டசி நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1981 – தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்இன்று போய் நாளை வா
தூறல் நின்னு போச்சு
மண்வாசனை
கிழக்குச் சீமையிலே

சூரியகாந்த் (Suryakanth) என்பவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகராவார். இதுவரை 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், பல எதிர்மறை, நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் இன்று போய் நாளை வா, தூறல் நின்னு போச்சு, மண்வாசனை, கிழக்குச் சீமையிலே போன்ற குறிப்பிடத்தக்க பல படங்களில் நடித்துள்ளார். இவர் 1981 இல் வெளிவந்த எம். ஏ. கஜாவின் வசந்த காலம் படத்தில் அறிமுகமானார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சூர்யகாந்தின் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் பக்கிரி ஆகும். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, குலதெய்வம் ராஜகோபால் நடித்த ஒரு படத்தின் பாடல் காட்சிகள் பூண்டி அணை பகுதியில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பைக் கண்ட பிறகு. இவர் படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டார். இவர் இளங்கலை படிக்க கல்லூரியில் இணைந்தார், ஆனால் படிப்பை முதல் ஆண்டு தொடர இயலவில்லை. துவக்க காலத்தில் போலி திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தார். அவர்களினால் தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி ஏமார்ந்தார். இவரின் தற்போதைய பெயரை இவருக்கு இட்டவர் மறைந்த சாண்டோ எம். எம். ஏ சின்னப்பா தேவர் ஆவார். ரஜினிகாந் நடித்த தாய் மீது சத்தியம் படத்தின் படப்பிடிப்பின் போது சின்னனப்பபா தேவரை இவர் சந்தித்துள்ளார். தேவர் இவரின் பெயர் கேட்டபோது. சூரிய பிரசாத் என்று கூறினார். தேவர் அது தெலுங்கு பெயரைப் போல உள்ளதாக கூறி சூரிய பிரசாத் பெயரை சூரியகாந்த் என்று மாற்றினார்.[2]

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

துவக்கத்தில் இவர் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடினார். தூறல் நின்னு போச்சு படத்தில் நடிக்க இயக்குநர் பாக்யராஜ் இவருக்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்கினார். இவர் படத்தில் ஒரு அமைதியான எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார். திரைப்படம் வெளியான பிறகு விமர்சகர்களிடமிருந்தும் ரசிகர்களிடமிருந்தும் பெரும் பாராட்டைப் பெற்றது. பின்னர், பாக்யராஜ் இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக தனது பெரும்பாலான படங்களில் வாய்ப்பு அளித்தார்.[3]

திரைப்படவியல்

[தொகு]

இது ஒரு பகுதி திரைப்படவியலாகும். நீங்கள் இதை விரிவாக்கலாம்.

1980 கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1981 வசந்த காலம் பாரதி
இன்று போய் நாளை வா ரவுடி
1982 தூறல் நின்னு போச்சு அய்யாவு
1984 குடும்பம்
1985 புது யுகம் பாரதி
புதிய தீர்ப்பு
நான் சிகப்பு மனிதன் மோகன்ராஜின் அடியாள்
1986 கண்ணத் தொறக்கணும் சாமி
ரசிகன் ஒரு ரசிகை
அம்மன் கோவில் கிழக்காலே
மண்ணுக்குள் வைரம்
எனக்கு நானே நீதிபதி
எங்கள் தாய்க்குலமே வருக
1988 இது நம்ம ஆளு
ராசாவே உன்னெ நம்பி
1989 ராஜநடை
௭ன் ரத்தத்தின் ரத்தமே

1990 கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1990 பாலம் முத்து
எங்கள் சாமி ஐயப்பன்
நம்ம ஊரு பூவாத்தா
1991 தையல்காரன்
1992 ராசுக்குட்டி பெரியபண்ணையின் மருமகன்
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இதுதாண்டா சட்டம்
1993 தாலாட்டு
கிழக்குச் சீமையிலே பெரிய கருப்பு
1994 சீவலபேரி பாண்டி கருப்பையா
தாமரை
ஜெய் ஹிந்த்
வரவு எட்டணா செலவு பத்தணா மாருதுபாண்டியின் உடனிருப்பவர்
ஜல்லிக்கட்டுக்காளை
1995 தமிழச்சி
மருமகன் செங்கலியப்பன்
நாடோடி மன்னன்
காந்தி பிறந்த மண்
1996 மீண்டும் சாவித்திரி
முஸ்தபா
1997 கடவுள்
1998 மூவேந்தர்
உரிமைப் போர்
எல்லாமே என் பொண்டாட்டிதான்
1999 முதல் எச்சரிக்கை
விரலுக்கேத்த வீக்கம் பியூன்
சுந்தரி நீயும் சுந்தரன் நானும்

2000 கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2000 காதல் ரோஜாவே
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை எதிர்க்கட்சி உறுப்பினர்
என் சகியே
2001 தாலி காத்த காளியம்மன்
குங்குமப்பொட்டுக் கவுண்டர்
2002 படை வீட்டு அம்மன்
2003 திவான்
பாய்ஸ் "பிம்ப்" மாணிக்கம்
சூரி வண்ணார்
2004 என் புருசன் எதிர்வீட்டுப் பொண்ணு
2005 ரைட்டா தப்பா
2005 அந்நியன் மின்சாரத் துறை கடைநிலை ஊழியர்
2007 ஒன்பது ரூபாய் நோட்டு
2008 காசிமேடு கோவிந்தன் மீனவர்

2010 கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்ததிரம் குறிப்புகள்
2010 சிங்கம்
2015 காக்கி சட்டை
2018 காலா சட்டமன்ற வேட்பாளர்
வட சென்னை பத்மாவின் தந்தை
2019 கைதி
சங்கத்தமிழன் மூர்த்தி
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

தொலைக்காட்சி

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Ajju (2018-01-09). "35 வருடமாக ஓட்டை சைக்கிள் ! வில்லன் நடிகர் சூரியகாந்தின் தற்போதைய அவல நிலை !". Tamil Behind Talkies (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.
  2. எட்வின்/பிரபஞ்சப்பிரியன், ஆம்பூர் (2016-09-23). "Sooriyakanth". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.
  3. "மனிதனின் பலம் நம்பிக்கையில் உள்ளது...| Dinamalar". www.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.

வெளி இணைப்புகள்

[தொகு]