சூரியக் கோயில்கள் (Sun temples) என்பது மத அல்லது ஆன்மீக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு கட்டிடமாகும். அதாவது பிரார்த்தனைகளுக்காவும் தியாகங்களுக்காகவும் இது அமைக்கப்பட்டது. சூரியனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இத்தகைய கோயில்கள் பல்வேறு கலாச்சாரங்களால் கட்டப்பட்டவை. இந்தியா, சீனா, எகிப்து, யப்பான், பெரு உள்ளிட்ட உலகம் முழுவதும் இது போன்றக் கோயில்கள் பரவலாக காணப்படுகின்றன. சில கோயில்கள் இடிந்து கிடக்கின்றன. சில அகழ்வாராய்ச்சி, பாதுகாப்பு அல்லது மறுசீரமைப்புக்கு உட்பட்டுள்ளன. மேலும் சில உலகப் பாரம்பரியக் களங்களாக தனித்தனியாக அல்லது கொனார்க் போன்ற பெரிய களத்தின் ஒரு பகுதியாக பட்டியலிடப்பட்டுள்ளன.[1]
சீனாவின்பெய்சிங்கில் உள்ள சூரிய ஆலயம் 1530ஆம் ஆண்டில் மிங் வம்சத்தின் போது ஜியாஜிங் பேரரசரால் கட்டப்பட்டது,[2] இதில் பூமிக்கும் சந்திரனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட புதிய கோயில்களும், சுவர்க்க ஆலயத்தின் விரிவாக்கமும் இருந்தது. அனைத்து கோயில்களையும் உள்ளடக்கிய ஓராண்டுகால சடங்குகளின் ஒரு பகுதியாக, உண்ணாவிரதம், பிரார்த்தனை, நடனம், விலங்கு பலி ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு ஏகாதிபத்திய அரசவையால் சூரிய ஆலயம் பயன்படுத்தப்பட்டது.[3] இக்கோயிலில் சிவப்பு நிறம் முக்கியமானதாக இருக்கிறது. இது சூரியனுடன் தொடர்புடையது. உணவு மற்றும் வைன் பிரசாதங்களுக்கான சிவப்பு பாத்திரங்கள் மற்றும் விழாக்களில் சக்கரவர்த்தி அணியும் சிவப்பு ஆடைகள் உட்பட அனைத்து சிவப்பு பொருள்களும் இந்த கோயிலில் தான் உண்டு. இந்தக் கோயில் இப்போது ஒரு பொது பூங்காவின் ஒரு பகுதியாக உள்ளது.[4]
குசராத்த்தின்மொதெராவிலுள்ளசூரியன் கோயிலும் அவற்றில் மிக முக்கியமானது. இவைகள் கிபி 1026 - கிபி 1027 ஆண்டுகளில் கட்டப்பட்டன. படையெடுப்பால் அழிக்கப்பட்ட நிலையில் இவை இரண்டும் இப்போது இடிபாடுகளாக இருக்கின்றன.
கொனார்க் சூரியக் கோயில் கீழைக் கங்க வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன்[13][14] என்ற மன்னனால் கிபி 1250 ஆண்டில் கட்டப்பட்டது. இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌர மதத்தில் சூரிய தேவன் தான் முக்கிய கடவுள் ஆவார். அதன் பேரிலேயே சூரிய தேவனுக்காக இந்த கோயில் எழுப்பப்பட்டதாக உண்டு. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர்கள், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் அமைக்கப்பட்டுலுள்ளன.
மார்த்தாண்ட சூரியன் கோயில் முதன்மைப் பகுதிக்குச் செல்லும் நுழைவாயிலிலிருந்து காணும் இடிபாடுகளின் தோற்றம்
இதைத் தவிர மேலும் பல நாடுகளில் சூரிய கடவுளர்களுக்கு கோயில்கள் உள்ளன:
தெற்கு மெக்சிக்கோவில் உள்ள பாலென்கேயின் மாயன் தளத்தில் உள்ள கிராஸ் வளாகத்தில் கோயிலில் உள்ள சூரியன் கோயில், கிபி 200 முதல் கிபி 900 வரை கட்டப்பட்டது.[26][27]
குவாத்தமாலாவின் எல் ஸோட்ஸின் மாயன் தளத்தில் உள்ள ஐந்தாம் நூற்றாண்டில் கைவிடப்பட்ட சூரியன் கோயில்.[28]
யப்பானில் பல ஷின்டோ ஆலயங்கள் உள்ளன. இதில் சூரிய தெய்வமான அமதெரசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது:
காமானுராவில் கிபி 710 ஆண்டில் நிறுவப்பட்ட அமனாவா ஷின்மி கோயில்.
மியாசாக்கி மாகாணத்தின் தகாச்சிஹோவில் அமனோவாடோ-ஜின்ஜா கோயில்.[31]
அமெரிக்க ஐக்கிய நாடுகளின்கொலராடோவில் உள்ள மேசா வெர்டே தேசியப் பூங்காவில் புவெப்லோ மக்களால் சூரியக் கோயிலாக பயன்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு உள்ளது,[32] கிபி 1275 இல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது,[33] இருப்பினும் அது முடிவடையவில்லை.[34]
↑Robert Ebersole (1957). Black Pagoda. University of Florida Press. p. 7.
↑"Official website". Tourism Department, Government of Odisha. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.
↑Robert Ebersole (1957). Black Pagoda. University of Florida Press. p. 34.
↑"Fall of Konark". Tourism Department, Government of Odisha. Archived from the original on 19 ஜூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 13 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
↑"District Anantnag". Anantnag District Administration. Archived from the original on 22 December 2013. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.
↑"Temple of the Sun". Unaahil B'aak:The Temples of Palenque. Wesleyan University. Archived from the original on 16 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 23 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
↑Brian Bocking (2004), The meanings of Shinto(PDF), School of Oriental and African Studies, University of London, p. 267, பார்க்கப்பட்ட நாள் 13 January 2014
↑P. Charbonneau; O.R. White; T.J. Bogdan. "Solar Astronomy in the Prehistoric Southwest". High Altitude Observatory, University Corporation for Atmospheric Research. Archived from the original on 20 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
↑"Sun Temple". U.S. National Park Service. பார்க்கப்பட்ட நாள் 11 January 2014.