சூர்யகாந்தம் கருநாடக இசையின் 17 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 17 வது இராகத்தின் பெயர் சாயாவதி.
ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம1 ப த2 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த2 ப ம1 க3 ரி1 ஸ |
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | " முத்துமோமு " | தியாகராஜர் | ஆதி |
கிருதி | " கனவோ நினைவோ " | கோபாலகிருஷ்ண பாரதியார் | மிஸ்ரசாபு |
கிருதி | " ஸ்ரீ சாம்பசிவாய " | முத்தையா பாகவதர் | ரூபகம் |
கிருதி | " கஞ்சம் கொஞ்சும் " | முத்தையா பாகவதர் | ரூபகம் |
கிருதி | " பேசாதே நெஞ்சமே " | முத்துத் தாண்டவர் | மிஸ்ர ஜம்பை |
சூர்யகாந்தத்தின் ஜன்ய இராகங்கள் இவை.