சூலாவ் (P209) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Julau (P209) Federal Constituency in Sarawak | |
![]() சூலாவ் மக்களவைத் தொகுதி (P209 Sarikei) | |
மாவட்டம் | சரிக்கே மாவட்டம்; பக்கான் மாவட்டம்; சூலாவ் மாவட்டம் |
வட்டாரம் | சரிக்கே பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 34,850 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | சூலாவ் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சரிக்கே |
பரப்பளவு | 2,858 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1968 |
கட்சி | பங்சா |
மக்களவை உறுப்பினர் | லேரி சிங் வெய் சியேன் (Larry Sng Wei Shien) |
மக்கள் தொகை | 35,126 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
சூலாவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sarikei; ஆங்கிலம்: Sarikei Federal Constituency; சீனம்: 泗里街联邦选区) என்பது மலேசியா, சரவாக், சரிக்கே பிரிவில் சரிக்கே மாவட்டம்; பக்கான் மாவட்டம்; சூலாவ் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P209) ஆகும்.[5]
சூலாவ் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து சூலாவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
சரிக்கே பிரிவு (Sarikei Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். சரிக்கே பிரிவின் தொடக்க கால வரலாறு 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து தொடங்குகிறது.
1845-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி, இந்த சரிக்கே பகுதியைத்தான், ராஜா ஜேம்சு புரூக் முதன்முதலில் பார்வையிட்டார். ஜேம்சு புரூக்கின் நிர்வாகத்திற்கு உள்ளூர் மக்களின் முதல் எதிர்ப்பு இங்குதான் தொடங்கியது.
சரிக்கே பிரிவின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்ததாகும். சரவாக்கில் உள்ள மற்ற பிரிவுகளை விட சரிக்கே பிரிவு அதிக அளவில் மிளகு உற்பத்தி செய்கிறது.
சூலாவ் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7]
சூலாவ் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)
சூலாவ் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)
சூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
சூலாவ் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[8][9] | |||
3-ஆவது மக்களவை | P137 | 1971-1973 | பான்யாங் சந்திங் (Banyang Janting) |
பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (PESAKA) |
1973-1974 | பாரிசான் நேசனல் பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (PESAKA) | |||
4-ஆவது மக்களவை | P147 | 1974-1976 | தாமஸ் சாலாங் சிடேன் (Thomas Salang Siden) |
சரவாக் தேசிய கட்சி (SNAP) |
1976-1978 | பாரிசான் நேசனல் (சரவாக் தேசிய கட்சி) (SNAP) | |||
5-ஆவது மக்களவை | 1978-1982 | |||
6-ஆவது மக்களவை | 1982-1986 | |||
7-ஆவது மக்களவை | P170 | 1986-1990 | பாரிசான் நேசனல் (சரவாக் தயாக் மக்கள் கட்சி) (PBDS) | |
8-ஆவது மக்களவை | P169 | 1990-1995 | ||
9-ஆவது மக்களவை | P181 | 1995-1999 | சிங் சி குவா (Sng Chee Hua) | |
10-ஆவது மக்களவை | P182 | 1999-2004 | ஜோசப் சாலாங் கண்டும் (Joseph Salang Gandum) |
பாரிசான் நேசனல் (சரவாக் மக்கள் கட்சி) (PRS) |
11-ஆவது மக்களவை | P208 | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | P209 | 2008-2013 | ||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | லேரி சிங் வெய் சியான் (Larry Sng Wei Shien) |
சுயேச்சை | |
2018-2021 | பாக்காத்தான் (மக்கள் நீதிக் கட்சி) (PKR) | |||
2021 | சுயேச்சை | |||
2021–2022 | மலேசிய தேசிய கட்சி (PBM) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
லேரி சிங் வெய் சியேன் (Larry Sng Wei Shien) | மலேசிய தேசிய கட்சி (PBM) | 9,159 | 40.64 | 40.64 ![]() | |
ஜோசப் சாலாங் கண்டும் (Joseph Salang Gandum) | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) | 7,819 | 34.69 | 34.69 ![]() | |
எல்லி லாவாய் நிகாலாய் (Elly Lawai Ngalai) | சுயேச்சை (Independent) | 5,224 | 23.18 | 23.18 ![]() | |
சூசன் ஜார்ஜ் (Susan George) | சரவாக் புதிய தயாக் கட்சி (PBDS Baru) | 335 | 1.49 | 1.49 ![]() | |
மொத்தம் | 22,537 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 22,537 | 98.30 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 390 | 1.70 | |||
மொத்த வாக்குகள் | 22,927 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 34,850 | 64.67 | 8.49 ▼ | ||
Majority | 1,340 | 5.95 | 4.61 ▼ | ||
பங்சா கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |