செ. மு. பூனாச்சா

செ. மு. பூனாச்சா
13வது ஒடிசாவின் ஆளுநர்
பதவியில்
1 செப்டம்பர் 1982 – 17 ஆகஸ்ட் 1983
முன்னையவர்ரங்கநாத் மிஸ்ரா (பொறுப்பு)
பின்னவர்பிசாம்பர் நாத் பாண்டே
பதவியில்
4 நவம்பர் 1980 – 24 ஜூன் 1982
முன்னையவர்எஸ். கே இராய் (பொறுப்பு)
பின்னவர்இரங்கநாத் மிசுரா (பொறுப்பு)
பதவியில்
30 ஏப்ரல் 1980 – 30 செப்டம்பர் 1980
முன்னையவர்பி. டி. சர்மா
பின்னவர்எஸ். கே இராய் (பொறுப்பு)
6வது மத்தியப் பிரதேச ஆளுநர்
பதவியில்
17 ஆகஸ்ட் 1978 – 29 ஏப்ரல் 1980
முன்னையவர்நிரஞ்சன் நாத் வாஞ்சூ
8வது இந்திய இரும்புவழி அமைச்சர்
பதவியில்
30 மார்ச் 1967 – 14 பிப்ரவரி 1969
பிரதமர்இந்திரா காந்தி
முன்னையவர்செ. கே. பாட்டீல்
பின்னவர்ராம் சுபாக் சிங்
கூர்க் மாநில முதலமைச்சர்
பதவியில்
27 மார்ச் 1952 – 31 அக்டோபர் 1956
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்பதவி நீக்கப்பட்டது
உருக்குத் துறை மற்றும் கனரக தொழில்த் துறைகளைன் அமைச்சர்
பதவியில்
15 பெப்ரவரி 1969 – 17 மார்ச் 1971
தொகுதிமங்களூர்
போக்குவரத்து, விமானப் போக்குவரத்துத் துறை, கப்பல் போக்குவரத்துத் துறைக, சுற்றுலாத் துறைகளின் அமைச்சர்
பதவியில்
ஜனவரி 25, 1966-மார்ச் 12, 1967
தொகுதிமைசூர் மாநிலம், மாநிலங்களவை
நிதி அமைச்சர்
பதவியில்
1 சனவரி 1966-24 ஜனவரி 1966
தொகுதிமைசூர் மாநிலம், மாநிலங்களவை
உள்துறை, மசூர் மாநிலம்
பதவியில்
1957-1962
தொகுதிவச்ரபேட்டை மக்களவைத் தொகுதி
வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளின் அமைச்சர் மைசூர் மாநிலம்
பதவியில்
1956-1962
தொகுதிவச்ரபேட்டை மக்களவைத் தொகுதி
கூர்க் மாநில சட்டமன்றத்தில் நிதியமைச்சர்.]]
பதவியில்
1952-1956
தொகுதிபெரியத்தநாடு
[[ இந்தியா நாடாளுமன்றம்]]
மங்களூர்
பதவியில்
1967–1971
முன்னையவர்அஜய் சங்கர் ஆல்வா
பின்னவர்கே. கே. ஷெட்டி
பெரும்பான்மை28522
[[இந்தியர் நாடாளுமன்றம்]]
மைசூர் மாநிலம், மாநிலங்களவை
பதவியில்
3 April 1964-25 February 1967
பின்னவர்டி. சித்தலிங்கையா
கூர்க் மாநில சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1952 - 1957
முன்னையவர்பதவி உருவாக்கப்படது
பின்னவர்பதவி நீக்கப்பட்டது
தொகுதிபெரித்தநாடு
பெரும்பான்மை1179
மைசூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1957-1962
முன்னையவர்பதவி உருவாக்கப்படது
பின்னவர்ஏ. பி. அப்பண்ணா
தொகுதிவச்ரபேட்டை
பெரும்பான்மை3221
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
செப்புதிரா முத்தனா பூனாச்சா

(1910-09-26)26 செப்டம்பர் 1910
ஆத்தூர், கூர்க் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு7 ஆகத்து 1990(1990-08-07) (அகவை 79)
இளைப்பாறுமிடம்successor4 பி. டி. சர்மா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்சி. பி. பெல்லியப்பா & காவேரி நம்பீசன் உட்பட நால்வர்
பெற்றோர்
  • successor4 பி. டி. சர்மா
வேலைவிடுதலை இயக்க வீரர், அரசியல்வாதி
அறியப்படுவதுகூர்க் மாநிலத்தின் ஒரே முதலைமைச்சர்

செப்புதிரா முத்தன்னா பூனாச்சா (Cheppudira Muthana Poonacha) கூர்க் மாநில (குடகு மாவட்டம்) முதலமைச்சராக இருந்தவர். கூர்க்கில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முக்கிய உறுப்பினரான இவர் மைசூர் மாநிலத்தில் அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ( மாநிலங்களவை மற்றும் மக்களவை ), இந்திய இரும்புவழி அமைச்சராகவும் மத்தியப் பிரதேசம் ஒடிசாஆளுநராகவும் இருந்தார்.

சுதந்திர இயக்கம்

[தொகு]

பூனாச்சா, கூர்க் திவான்களின் வழித்தோன்றல் ஆவார். சுதந்திர இயக்க காலத்தில் 1932 மற்றும் 1933 இல் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தின் போது இரண்டு முறை சிறை தண்டனை பெற்றார். 1940-41 மற்றும் 1942-44 இல் சிறையில் அடைக்கப்பட்டார். 1938ல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரானார். மேலும், 1938 இல் கூர்க் மாவட்ட வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1941 இல் அதன் தலைவரானார். 1945 இல் கூர்க் சட்டமன்றக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1945 முதல் 1951 வரை காங்கிரசு கட்சியின் சட்டமன்றத் தலைவராக இருந்தார். கூர்க்கில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முக்கிய உறுப்பினரானார்.

அரசியல்

[தொகு]

1947இல் கூர்க் 1956 வரை தென்னிந்தியாவில்]] தனி மாநிலமாக இருந்தது. அந்த நேரத்தில் தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்கள் பம்பாய் மாநிலம், சென்னை மாகாணம், மைசூர் இராச்சியம், திருவிதாங்கூர் இராச்சியம், கொச்சி இராச்சியம் மற்றும் ஐதராபாத் இராச்சியம் என இருந்தது. 24 உறுப்பினர்களைக் கொண்டிருந்த கூர்க் மாநில சட்டமன்றம் இரு அமைச்சர்களைக் கொண்டிருந்தது.

அரசியலமைப்பு சட்டமன்ற உறுப்பினர் (இந்திய அரசியலமைப்பு)

[தொகு]

பூனாச்சா, அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக கூர்க் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

மாநில அமைச்சர் (மைசூர்)

[தொகு]

புதிய மைசூர் அரசு உருவான பிறகு பூனாச்சா அதன் முதல்வர் எஸ். நிஜலிங்கப்பாவின் கீழ் உள்துறை மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்தார். 1959 முதல் 1963 வரை இந்திய மாநில வர்த்தகக் கழகத்தின் தலைவராகவும் இருந்தார். 1960 ஆம் ஆண்டில் சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இந்திய அரசாங்கத்தின் வர்த்தகக் குழுவை வழிநடத்தினார். 1961 இல் யப்பானுக்கு மாநில வர்த்தகக் கழகத்தின் தூதுக்குழுவின் தலைவராக இருந்தார்.

மத்திய அமைச்சர்

[தொகு]

பூனாச்சா ஏப்ரல் 1964 இல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பண்டித ஜவகர்லால் நேருவின் அமைச்சரவையில் துறை இல்லாமல் பூனாச்சா மத்திய அமைச்சராக ஆக்கப்பட்டார். ஜனவரி 1 முதல் 24, 1966 வரை, நிதி அமைச்சகத்தில் மாநில அமைச்சராகவும், 25 ஜனவரி 1966 முதல் மார்ச் 12, 1967 வரை போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, கப்பல் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் இருந்தார். 1969ல் மங்களூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1971 இல் நிறுவன காங்கிரசு கட்சியின் வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[2]

மத்திய ரயில்வே அமைச்சர்

[தொகு]

சிறிது காலத்திற்குப் பிறகு 1967 முதல் 1969 வரை இரும்புவழிக்கான மத்திய அமைச்சராகவும் (முதலில் சிறுது காலம் பொறுப்பு பின்னர் தனி அமைச்சகம்) 1969 இல் எஃகு மற்றும் கனரகத் தொழில்துறை அமைச்சராகவும் ஆனார். அப்போது கூர்க்கைச் சேர்ந்த [[மங்களூர் மங்களூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[3]

ஓய்விற்குப் பின்னர்

[தொகு]

ஆளுநர்

[தொகு]

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இரண்டு முறை ஆளுநராகப் பணியாற்றினார். மத்தியப் பிரதேச ஆளுநராக 17 ஆகஸ்ட் 1978 இல் பொறுப்பேற்றார். பின்னர் 30 ஏப்ரல் 1980 இல் ஒடிசாவின் ஆளுநராகப் பொறுப்பேற்றார் .

குடும்பம்

[தொகு]

பூனாச்சாவுக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவருடைய இரண்டு பிள்ளைகள், சி.பி.பெல்லியப்பா மற்றும் காவேரி நம்பீசன், ஆங்கிலத்தில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களாவர்.

இதனையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Prasad, Rajendra (1984). Dr. Rajendra Prasad, Correspondence and Select Documents: Volume Seventeen ... - Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170230021. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
  2. "Kodagu goes to LS polls with Mysore for first time - KARNATAKA". The Hindu. 2009-04-12. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
  3. "[IRFCA] Railway Ministers". Irfca.org. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.

வெளி இணைப்புகள்

[தொகு]