செக்சன் 375 (Section 375பிரிவு 375: மார்சி யா ஜபர்தஸ்தி என்றும் அழைக்கப்படுகிறது) [1][2] என்பது 2019 இந்தியாவில் வெளியான இந்தி -மொழி நீதிமன்ற நாடகத் திரைப்படமாகும், இது குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் மற்றும் எஸ்சிஐபிஎல்லால் தயாரிக்கப்பட்டது. மணீஷ் குப்தா எழுதி அஜய் பாகல் இயக்கினார்.[3][4] இந்தத் திரைப்படம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375 என்பதனை அடிப்படையாக கொண்டது [5][6][7][8] இந்த படத்தில் அக்சய் கண்ணா, ரிச்சா சாத்தா, மீரா சோப்ரா மற்றும் ராகுல் பட் ஆகியோர் நடித்துள்ளனர்.[9] படத்தின் முதன்மை புகைப்படம் எடுத்தல் ஜனவரி 2019 இல் தொடங்கியது.[10]
இந்த படம் இந்தியாவில் 13 செப்டம்பர் 2019 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[11] படம் தொடக்க நாளில் குறைந்த எண்ணிக்கையிலான பார்வாயாளர்களைக் கொண்டிருந்தது. வணிக ரீதியில் சுமாரான படமாக அமைந்தது.
பரவலாக புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ரோஹன் குரானா ( ராகுல் பட் ) உதவி ஆடை வடிவமைப்பாளரான அஞ்சலி டாங்கிள் ( மீரா சோப்ரா ) என்பவரை பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அமர்வு நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டு உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறார். மூத்த மற்றும் திறமையான குற்றவியல் வழக்கறிஞர் தருண் சலூஜா குற்றம் சாட்டப்பட்ட அக்சய் கண்ணாவினை ஆதரித்து வாதாடுகிறார்.அதே சமயம் கிரால் காந்தி ( ரிச்சா சாட்டா ), ஒரு காலத்தில் சலூஜாவின் பயிற்சியாளராக இருந்த இவர் தற்போது அவரை எதிர்த்து தனது முதல் வழக்கில் ஈடுபடுகிறார். தருண் என்பவரது கொள்கையின் படி சட்டம் என்பது உண்மை, நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டது, ஒரு வழக்குரைஞர் ஒரு வழக்கில் ஈடுபடும் போது உணர்வுபூர்வமாகவோ ஈடுபடுதல் கூடாது என்றும், ஒரு நெறிமுறை விவாதத்தில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் நம்புகிறார்.
தருண் தனது குறுக்கு விசாரணையில் சாட்சிகள், பொய்கள் மற்றும் முக்கிய சாட்சிகளால் மறைக்கப்பட்ட உண்மைகளை அம்பலப்படுத்துகிறார். ரோகனுடன் அஞ்சலிக்கு ஒருமித்த உறவு இருந்தது என்று அவர் முன்மொழிகிறார்.
ரோகன் அவளுடன் உடல் உறவில் மட்டுமே ஆர்வம் காட்டுவதனை அவள் உணர்கிறாள். அவன் தனக்கு வாழ்க்கைத் துணையாக இருக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்க்கிறார். இந்த பிரச்சினையில் இருவருக்கும் இடையே ஒரு பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. ரோகன் அவளை சிறுமைப்படுத்தி, தான் இல்லை எனில் உனக்கு வாழ்க்கை என்பதே இருக்காது என்று அவளிடம் சொல்கிறான். பின்னர், ரோகன் அவளை தனது இரண்டாவது குடியிருப்பில் இருந்து வெளியேற்றுகிறார். சில நாட்களுக்குப் பிறகு, அஞ்சலி ரோகனிடம் மன்னிப்பு கேட்கிறார் அவர்கள் தங்கள் உறவை மீண்டும் புதுப்பித்தனர். பிற்பகலில், அவர் இந்த சம்பவத்தை காவல் துறையினரிடம் வன்கலவி என புகார் செய்கிறார்.
தருண், ஒருமித்த உடல் உறவுகளை வன்கலவி என்று சட்டம் கருதவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். கடந்த காலத்தில் ஒரு தம்பதியினர் ஒருமித்த உறவைக் கொண்டிருந்தாலும், பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் அடுத்தடுத்த பாலியல் உறவுகள் ஈடுபடுவது வன்கலவி தான் என்று ஹிரால் வாதிடுகிறார். பாலியல் குற்றத்தை கற்பழிப்பு என வரையறுக்கக்கூடிய நிபந்தனைகளை வரையறுக்கும் தண்டனைச் சட்டம் 375 இன் சட்ட விதிகளை இந்த வழக்கு மறுக்கிறது.