செங்காவ்

செங்காவ்
Chengkau
நெகிரி செம்பிலான்
Map
ஆள்கூறுகள்: 2°33′N 102°08′E / 2.550°N 102.133°E / 2.550; 102.133
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம் ரெம்பாவ்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
71300
மலேசியத் தொலைபேசி எண்கள்+60 06438 000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

செங்காவ் (மலாய்; ஆங்கிலம்: Chengkau; சீனம்: 正高) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ரெம்பாவ் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம் ஆகும். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முக்கிம் என்பதை லுவாக் (Luak) என்று அழைக்கிறார்கள்.[1]

தொடக்கக் காலத்தில், செங்காவ் நகரம் பழைய தொடருந்து நிலையத்திற்கு அருகில் கட்டப்பட்டது. அந்த தொடருந்து நிலையக் கட்டிடம் இன்னும் உள்ளது.

பின்னர் காலத்தில் செங்காவ் நகரம் சிரம்பான் - தம்பின் சாலைக்கு அருகில் மாற்றப்பட்டது. 1980-களில், செங்காவ் நகரத்தில் பாதி நகரம் தீக்கிறையானது. அதன் பின்னர் செங்காவ் நகரம் மிகவும் நவீன கட்டமைப்புகளுடன் மீண்டும் அதே இடத்தில் நிர்மாணிக்கப்பட்டது.

பொது

[தொகு]

2010-இல் செங்காவ் நகரத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. செங்காவ் நகரம் புலாவ் மாம்பட் எனும் சிறுநகரத்தையும் மற்றும் அஸ்தானா ராஜா அரண்மனை வளாகத்தையும் இணைக்கும் நகரமாக விளங்குகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chengkau is situated in Rembau, Negeri Sembilan, MALAYSIA". www.poskod.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
  2. "Kampung Chengkau Ulu, Rembau, Negeri Sembilan,". ujang kutik. 2011. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]