செங்கோட்டை | |
---|---|
இயக்கம் | சி. வி. சசிகுமார் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
திரைக்கதை | சி. வி. சசிகுமார் |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | வி. மணிகண்டன் |
படத்தொகுப்பு | பி. ரமேஷ் |
கலையகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 19, 1996 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
செங்கோட்டை (Sengottai) 1996 ஆம் ஆண்டு அர்ஜுன், மீனா மற்றும் ரம்பா நடிப்பில், ஆர். பி. சௌத்ரி தயாரிப்பில், வித்தியாசாகர் இசையில், சி. வி. சசிகுமார் இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம்.[1][2][3] இப்படம் தெலுங்கில் எர்ரகோட்டா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
அமைச்சராக இருக்கும் திருமூர்த்தி (ராசன் பி. தேவ்) பிரதமராக ஆசைப்பட்டு அதற்காக அப்போது பிரதமராக இருப்பவரைக் கொல்லத் திட்டமிடுகிறான். சேகர் (அர்ஜுன்) காவல்துறை அதிகாரி. சேகரின் காதலி யமுனா (ரம்பா) சேகரின் எதிரிகளால் கொல்லப்படுகிறாள். சேகரின் தந்தை (விஜயகுமார்) தன் நண்பர் நீலகண்டனின் (டெல்லி கணேஷ்) மகள் மீனாவை (மீனா) சேகருக்குத் திருமணம் செய்ய முடிவுசெய்கிறார்.
மீனாவின் வீட்டில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தோழி ஃபிராங்கா. அவள் ஒருநாள் காணாமல் போகவே அவளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு சேகருக்குத் தரப்படுகிறது. ஃபிராங்காவைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மீனா சிறையில் அடைக்கப்படுகிறாள். காந்தி ஜெயந்தி அன்று சிறைக்கு வரும் திருமூர்த்தியைக் கோபத்தில் தாக்குகிறாள் மீனா. சேகர் யமுனாவிடம் அவள் அப்படி நடந்துகொண்டதற்கான காரணத்தைக் கேட்கிறான். மீனா நடந்த உண்மைகளைக் கூறுகிறாள்.
ஃபிராங்காவின் கைப்பை திருடுபோனதால் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் செல்லும்போது, திருமூர்த்தியால் கொல்லப்படுகிறாள். காவல் அதிகாரி தங்கமணி (ஆனந்தராஜ்) அந்தப் பழியை மீனாவின் மீது சுமதி அவளைக் கைதுசெய்கிறான். அவமானம் தாங்காமல் மீனாவின் குடும்பத்தினர் தற்கொலை செய்துகொள்கின்றனர். நடந்த உண்மைகளை தெரிந்துகொள்ளும் சேகர் மீனாவை தன் தந்தை விருப்பப்படி சிறையிலேயே திருமணம் செய்து அவளைப் பிணையில் வெளியே கொண்டுவருகிறான். சேகரிடம் உண்மைகளை ஒத்துக்கொள்ளும் தங்கமணியை திருமூர்த்தியின் ஆட்கள் கொன்று சேகரைக் கடத்துகிறார்கள். சேகர் பிரதமரைக் கொல்லாவிட்டால் தான் கடத்திவைத்துள்ள அவன் தந்தை மற்றும் மனைவி மீனாவைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறான் திருமூர்த்தி. அவனிடமிருந்து தப்பிக்கும் சேகர் தன் தந்தை மற்றும் மனைவியை மீட்கிறான். திருமூர்த்தியைக் கொன்று பிரதமரைக் காப்பாற்றுகிறான்.
படத்தின் இசையமைப்பாளர் வித்தியாசாகர். பாடலாசிரியர்கள் வாலி, வைரமுத்து, முத்துலிங்கம் மற்றும் பழனிபாரதி.
வ. எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | பூமியே பூமியே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 5:19 |
2 | பாடு பாடு | சித்ரா | 4:36 |
3 | உச்சிமுதல் பாதம் | ஹரிஹரன், மிதாலி பானர்ஜி பவ்மிக் | 5:06 |
4 | வெண்ணிலவே வெள்ளி பூவே | மனோ, சித்ரா | 4:06 |
5 | விண்ணும் மண்ணும் | மனோ, சுவர்ணலதா | 4:35 |
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)