செடேக் மொழி Jedek Language Bahasa Jedek | |
---|---|
Jdɛk / ɟᶽəˈdɛk˺ | |
Orang Asli | |
நாடு(கள்) | மலேசியா |
பிராந்தியம் | கிளாந்தான் ஜெலி மாவட்டம் |
இனம் | மென்டிரிக் மக்கள்; பாத்தேக் மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 280 (2017)[1] |
அவுஸ்திரேலிய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | None (mis ) |
மொழிக் குறிப்பு | jede1239[2] |
செடேக் மொழி (ஆங்கிலம்: Jedek Language; மலாய்: Bahasa Jedek) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின், அசிலியான் மொழிகள்; ஜெகாய மொழிகள் எனும் 2 துணைக் குடும்பங்களைச் சார்ந்த ஒரு மொழியாகும்.[3]
கிளாந்தான் மாநிலத்தின் ஜெலி மாவட்டத்தில், ஜெலி நகரின் தெற்கே உள்ள சுங்கை ருவால் பகுதியில் ஏறக்குறைய 280 பேர் செடேக் மொழி பேசுகிறார்கள்.[1]
செடெக் மொழி பேசுபவர்கள் தங்களை மென்டிரிக் மக்கள் (Menriq People) அல்லது பாத்தேக் மக்கள் (Batek People) என்று வெளியாட்களிடம் சொல்கிறார்கள். ஆனால் மென்டிரிக் மக்கள், பாத்தேக் மக்கள் பேசும் மொழிகளுடன், செடெக் மொழி மிக நெருங்கிய தொடர்புடையதாக இருந்தாலும், அந்த மொழிகளில் இருந்து வேறுபட்டது.
1970-களில், ஜெகாய் மொழி மற்றும் செடெக் மொழி பேசும் செமாங் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு மலேசிய அரசாங்கம் நிதியுதவி அளித்து வருகிறது. அத்துடன் செமாங் மக்களுக்கு, கிளாந்தான் மாநிலத்தின் ஜெலி மாவட்டத்தில், நான்கு குடியிருப்புப் பகுதிகளை உருவாக்கித் தந்துள்ளது. இருப்பினும், செடெக் மொழியை, மலேசிய அரசாங்கம் இதுவரையிலும் அங்கீகரிக்கவில்லை.