செத்தியா வங்சா (P118) மலேசிய மக்களவைத் தொகுதி கோலாலம்பூர் | |
---|---|
Setiawangsa (P118) Federal Constituency in Kuala Lumpur | |
மாவட்டம் | மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள் கோலாலம்பூர் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 95,753 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | செத்தியா வங்சா தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலாலம்பூர்; செத்தியா வங்சா, தாமான் செத்தியா வங்சா, தியாரா செத்தியா வங்சா, புக்கிட் செத்தியா வங்சா, புஞ்சாக் செத்தியா வங்சா |
பரப்பளவு | 16 ச.கி.மீ[2] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாக்காத்தான் |
மக்களவை உறுப்பினர் | நிக் நசுமி நிக் அகமது (Nik Nazmi Nik Ahmad) |
மக்கள் தொகை | 147,095 [3] |
முதல் தேர்தல் | 2004 |
இறுதித் தேர்தல் | 2022[4] |
செத்தியா வங்சா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Setiawangsa; ஆங்கிலம்: Setiawangsa Federal Constituency; சீனம்: 斯迪亚旺沙国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P118) ஆகும்.
செத்தியா வங்சா மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து செத்தியா வங்சா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
செத்தியா வங்சா, கோலாலம்பூர் மாநகரத்தில், கிழக்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப் பகுதி ஆகும்.[5] கோலாலம்பூர் மாநகர மையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தப் புறநகருக்கு அருகில் அம்பாங் புறநகரம் அமைந்துள்ளது. செத்தியா வங்சா புற நகர்ப் பகுதியில் 4 முக்கிய குடியிருப்புகள் உள்ளன.[6]
தாமான் செத்தியா வங்சா, மற்றும் தியாரா செத்தியா வங்சா ஆகியவை செத்தியா வங்சா புறநகர்ப் பகுதியின் பரபரப்பான இடத்தில் அமைந்துள்ளன. புஞ்சாக் செத்தியா வங்சா மற்றும் புக்கிட் செத்தியா வங்சா ஆகியவை அமைதியான சூழலில் மலைகளின் மேல் அமைந்துள்ளன.[5]
ஐலண்ட் & பெனின்சுலர் (Island & Peninsular (I&P) Group Sdn Bhd) எனும் நிறுவனத்தால் இந்த தாமான் செத்தியா வங்சா குடியிருப்பு உருவாக்கப்பட்டது. 1980-களில் இந்தக் குடியிப்பின் அடிவாரத்திலும்; நடு மலைப் பகுதிகளிலும் கட்டுமானங்கள் தொடங்கப்பட்டன.[6]
செத்தியா வங்சா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
2004-ஆம் ஆண்டில் வங்சா மாஜு; தித்திவங்சா மக்களவைத் தொகுதிகளில் இருந்து செத்தியா வங்சா தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P118 | 2004–2008 | சுல்கசனான் ரபீக் (Zulhasnan Rafique) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | அகமட் பவுசி சகாரி (Ahmad Fauzi Zahari) | ||
14-ஆவது மக்களவை | 2018–2022 | நிக் நசுமி நிக் அகமது (Nik Nazmi Nik Ahmad) |
பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
95,753 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
76,725 | 78.08% | ▼ -7.71% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
74,764 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
295 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
696 | ||
பெரும்பான்மை (Majority) |
12,614 | 16.27% | ▼ -7.35% |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[7][8] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
நிக் நசுமி நிக் அகமது (Nik Nazmi Nik Ahmad) |
பாக்காத்தான் | 74,764 | 34,434 | 46.06% | -10.59% ▼ | |
நூருல் பாட்சிலா கமாருடின் (Nurul Fadzilah Kamarulddin) |
பெரிக்காத்தான் | - | 22,270 | 29.79% | +29.79% | |
இசுடின் இசாக் (Izudin Ishak) |
பாரிசான் | - | 16,333 | 21.85% | -11.18% ▼ | |
பிபி சுனிதா சகந்தர் கான் (Bibi Sunita Sakandar Khan) |
உள்நாட்டு போராளிகள் கட்சி (GTA / PEJUANG) |
- | 953 | 1.27% | +1.27 | |
மியோர் ரோசுலி மியோர் ஜபார் (Mior Rosli Mior Mohd Jaafar) |
சுயேச்சை | - | 492 | 0.66% | +0.66 | |
இஸ்டேன்லி லிம் யென் தியோங் (Stanley Lim Yen Tiong) |
சுயேச்சை | - | 282 | 0.0.38% | +0.0.38 |