செத்தியூ (P034) மலேசிய மக்களவைத் தொகுதி திராங்கானு | |
---|---|
Setiu (P034) Federal Constituency in Terengganu | |
செத்தியூ மக்களவைத் தொகுதி (P034 Setiu) | |
மாவட்டம் | செத்தியூ மாவட்டம் திராங்கானு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 110,918 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | செத்தியூ தொகுதி |
முக்கிய நகரங்கள் | செத்தியூ மாவட்டம், பண்டார் பரமேசுவரி, சாலோக், சுங்கை தோங், குந்தோங் |
பரப்பளவு | 1,672 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | சகாரிசுகிர்னைன் அப்துல் காதர் (Shaharizukirnain Abdul Kadir) |
மக்கள் தொகை | 122,390 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
செத்தியூ மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Setiu; ஆங்கிலம்: Setiu Federal Constituency; சீனம்: 士兆国会议席) என்பது மலேசியா, திராங்கானு, செத்தியூ மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P034) ஆகும்.[8]
செத்தியூ மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து செத்தியூ மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]
செத்தியூ மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். செத்தியூ மாவட்டத்தின் வடக்கில் பெசுட் மாவட்டம்; தெற்கில் கோலா திராங்கானு மாவட்டம் ; கிழக்கில் கோலா நெருசு மாவட்டம் (Kuala Nerus District) மற்றும் தென்சீனக் கடல் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
1935-ஆம் ஆண்டில் பெசுட் மாவட்டத்திற்கும் மாநில தலைநகரான கோலா திராங்கானு நகருக்கும் இடையே செத்தியூ மாவட்டம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. 1985-ஆம் ஆண்டில் அதன் தற்போதைய எல்லைகளைக் கொண்ட செத்தியூ மாவட்டம் மறுசீரமைக்கப்பட்டது.[10][11]
செத்தியூ மாவட்டம் திராங்கானு மாநிலத்தில் இரண்டாவது புதிய மாவட்டம்; மற்றும் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டமாகும். இதன் தலைநகரமான பண்டார் பரமேசுவரி (Bandar Permaisuri); இந்த மாவட்டத்தின் பொருளாதார வணிக மையமாகச் செயல்படுகிறது.
செத்தியூவில் உள்ள பெரும்பாலான மலாய்க்காரர்கள்; குறிப்பாக வடக்குப் பகுதியில் உள்ளவர்கள் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியைப் பேசுகிறார்கள். இருப்பினும் செத்தியூவின் தெற்குப் பகுதியில் வசிப்பவர்கள் திராங்கானு மலாய் மொழியை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.
செத்தியூ மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1984-ஆம் ஆண்டில் செத்தியூ தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P031 | 1986–1990 | முகமது யூசுப் முகமது நூர் (Mohamed Yusof Mohamed Noor) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | தெங்கு மகமூத் தெங்கு மன்சோர் (Tengku Mahmud Tengku Mansor) | ||
9-ஆவது மக்களவை | P034 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | செ கனி செ அம்பாக் (Che Ghani Che Ambak) |
மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | முகமது யூசோப் மஜித் (Mohd Yusop Majid) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | முகமது சிதின் சாபி (Mohd Jidin Shafee) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | சே முகமட் சுல்கிபிளி ஜூசோ (Che Mohamad Zulkifly Jusoh) | ||
14-ஆவது மக்களவை | 2018–2020 | சகாரிசுகிர்னைன் அப்துல் காதர் (Shaharizukirnain Abdul Kadir) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | சகாரிசுகிர்னைன் அப்துல் காதர் (Shaharizukirnain Abdul Kadir) |
50,768 | 59.85% | + 10.90% | |
பாரிசான் நேசனல் | அப்துல் ரகுமான் யாசின் (Abdul Rahman Yassin) |
31,736 | 37.41% | - 7.35% ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | முகமது நிகா (Mohamad Ngah) |
2,125 | 2.50% | - 4.09% ▼ | |
தாயக இயக்கம் | வான் அட்னான் வான் அலி (Wan Adnan Wan Ali) |
203 | 0.24% | + 0.24% | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 84,832 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 1,044 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 153 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 86,029 | 79.06% | - 6.36% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 107,294 | ||||
பெரும்பான்மை (Majority) | 19,032 | 22.44% | + 18.55% | ||
மலேசிய இசுலாமிய கட்சி | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[12] |