மலேசிய கூட்டரசு சாலை 16 Malaysia Federal Route 16 Laluan Persekutuan Malaysia 16 | |
---|---|
செனாய் வானூர்தி நிலைய நெடுஞ்சாலை Senai Airport Highway Jalan Lapangan Terbang Senai | |
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 4.82 km (3.00 mi) |
பயன்பாட்டு காலம்: | 1970 – |
வரலாறு: | கட்டுமானம் 1973 |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலை J192 கம்போங் மாஜு ஜெயா சாலைசுகூடாய் நெடுஞ்சாலை | |
தெற்கு முடிவு: | செனாய் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | கம்போங் மாஜு ஜெயா |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மலேசிய கூட்டரசு சாலை 16 அல்லது செனாய் வானூர்தி நிலைய நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 16 அல்லது Senai Airport Highway; மலாய்: Laluan Persekutuan Malaysia 16 அல்லது Jalan Lapangan Terbang Senai) என்பது தீபகற்ப மலேசியா, ஜொகூர், கூலாய் மாவட்டம், செனாய் நகரத்தையும்; செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் இணைக்கும் கூட்டரசு சாலையாகும்.
அங்கிருந்து மலேசிய கூட்டரசு சாலை 1; மற்றும் சுகூடாய் நெடுஞ்சாலை வழியாக ஜொகூர் பாரு நகரத்துடன் இணைக்கிறது.[1]
4.82 கிமீ (3.00 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை செனாய் நகரத்துடன் இணைக்கிறது.
இந்த நெடுஞ்சாலை 1970-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1973-ஆம் ஆண்டில், செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் செயல்படத் தொடங்கியபோது, இந்த நெடுஞ்சாலையும் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.
மலேசிய கூட்டரசு சாலை 16-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது செனாய் நகரத்தில் உள்ளது.
மலேசிய கூட்டரசு சாலை 16-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.
செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஜொகூர், கூலாய் மாவட்டம், செனாய் நகரில் அமைந்துள்ளது. ஜொகூர் பாரு மாநகரத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தீபகற்ப மலேசியாவின் ஐந்தாவது பரபரப்பான வானூர்தி நிலையமாக விளங்குகிறது.[2]
இந்த வானூர்தி நிலையம் 1974-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. செனாய் வானூர்தி நிலையம் ஆண்டுக்கு 4.5 மில்லியன் பயணிகளையும் 80,000 டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டது.
4E தரத்தில் 3,800-மீட்டர் ஓடுபாதை கொண்ட செனாய் வானூர்தி நிலையத்தினால், ஏர்பஸ் ஏ350 (Airbus A350 XWB); போயிங் 777 (Boeing 777) மற்றும் அன்டோனோவ் ஆன்-124 (Antonov An-124) சரக்கு விமானம் போன்ற பெரிய ஜெட் விமானங்களையும் கையாள முடியும்.[3]
கிமீ | வெளிவழி | பரிமாற்றம் | இலக்கு | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
0 |
1601 | செனாய் செனாய் விமான நிலைய நெடுஞ்சாலை பரிமாற்றம் |
சுகூடாய் நெடுஞ்சாலை வடக்கு கூலாய் சிம்பாங் ரெங்கம் ஆயர் ஈத்தாம் கிழக்கு பொந்தியான் சுகூடாய் ஜொகூர் பாரு J4 கேலாங் பாத்தா |
பல அடுக்கு மேம்பாலச் சாலை பரிமாற்றம் | |
செனாய் விமான நிலைய நெடுஞ்சாலை நெடுஞ்சாலைதொடக்கம்/முடிவு | |||||
இருப்புப்பாதைக் குறுக்கிடம் | |||||
சுகூடாய் ஆற்றுப் பாலம் | |||||
1602 | Senai-SDE பரிமாற்றம் |
செனாய்-தெசாரு விரைவுச்சாலை | |||
1603 | Jalan Kampung Maju Jaya Interchange | வடமேற்கு தாமான் பிந்தாங் உத்தாமா தாமான் செரி செனாய் எக்கோன் சேவ் செனாய் கிழக்கு J192 சீலோங் சாலை சீலோங் கம்போங் மாஜு ஜெயா தாமான் பிந்தாங் தாமான் அண்டால் தாமான் செம்பேனா தாமான் செனாய் ஜெயா |
T-சந்திப்புகள் | ||
தாமான் செரி செனாய் | தாமான் செரி செனாய் | செனாய் வானூர்தி நிலையம் | |||
1604 | செனாய் தொழிதுறை இடைமாற்று | மேற்கு இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலை | |||
செனாய் தொழில்துறை பகுதி | செனாய் தொழில்துறை பகுதி | செனாய் வானூர்தி நிலையம் | |||
1605A | செனாய் தொழில்துறை பகுதி A | வடமேற்கு பெர்சியாரான் சைபர் செனாய் தொழில்துறை பகுதி |
செனாய் வானூர்தி நிலையம் | ||
1605B | செனாய் தொழில்துறை பகுதி B | வடமேற்கு சைபர் சாலை 1 செனாய் தொழில்துறை பகுதி |
செனாய் வானூர்தி நிலையம் | ||
4 |
|||||
செனாய் வானூர்தி நிலைய எல்லை | |||||
பெட்ரோனாஸ் | பெட்ரோனாஸ் | செனாய் நோக்கி | |||
செனாய் நிலைய பள்ளிவாசல் | செனாய் நிலைய பள்ளிவாசல் |
செனாய் வானூர்தி நிலையம் | |||
செனாய் வானூர்தி நிலையம் நெடுஞ்சாலை தொடக்கம் முடிவு | |||||
4.5 | 1606 | சுல்தான் இஸ்மாயில் விமான நிலைய சுற்றுவழி | வடக்கு ஜும்போ சாலை MAS வளாகம் MAS வானூர்திகள் ஏர் ஏசியா வானூர்திகள் செனாய் வானூர்தி நிலைய குடியிருப்புகள் பண்டார் புத்ரா கூலாய் பண்டார் கூலாய் காடு |
சுற்றுவட்டம் | |
செனாய் வானூர்தி நிலையம் (சுல்தான் இசுமாயில் வானூர்தி நிலையம்) (முதன்மை நுழைவாயில் மண்டபம்) செனாய் ஏரோ பேரங்காடி (வானூர்தி நிலையத்திற்குள் விற்பனை மையம்) | |||||
4.8 | செனாய் வானூர்தி நிலையம் (சுல்தான் இசுமாயில் வானூர்தி நிலையம்) (முதன்மை நுழைவாயில் மண்டபம்) செனாய் ஏரோ பேரங்காடி (வானூர்தி நிலையத்திற்குள் விற்பனை மையம்) |
கிழக்கு செனாய் வானூர்தி நிலையம் (சுல்தான் இசுமாயில் வானூர்தி நிலையம்) முதன்மை நுழைவாயில் மண்டபம் வருகை/புறப்பாடு செனாய் ஏரோ பேரங்காடி |