அனந்த பத்மநாபசுவாமி கோவில், சென்னை | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவு: | சென்னை |
கோயில் தகவல்கள் |
அனந்த பத்மநாபசுவாமி கோவில் இந்தியாவின் சென்னை அடையாருக்கு அருகில் உள்ள ஒரு இந்து சமயக் கோவிலாகும் . இந்தக் கோவில் காந்தி நகர் இரண்டாவது முதன்மை சாலையில் , போர்டிசு மலர் மருத்துவமனை அருகில் அமைந்துள்ளது. இந்து சமயக் கடவுளான விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோவில், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலின் பெயரால் அழைக்கப்படுகிறது. மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் உள்ளதைப் போலவே விஷ்ணுவும் ஐந்து தலை பாம்பின் மீது சாய்ந்தபடி சித்தரிக்கப்படுகிறார். திருவிதாங்கூரின் கடைசி அரசரான சித்திர திருநாள் நன்கொடையாக வழங்கிய நிலத்தில் 1962 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோவில் சென்னையில் வாழும் மலையாளிகளுக்காக இயங்கி வருகிறது. கோவில் கேரள பாணியில் கட்டப்பட்டுள்ளது.
கோவிலின் வளாகத்தில், தினசரி பூசை நடத்துவதற்கு ஒரு யாகசாலை உள்ளது. திருவிதாங்கூரின் கடைசி அரசரான சித்திர திருநாளின் சிலை ஒன்று 29 செப்டம்பர் 1939 தேதி நடைபெற்ற கோவில் நுழைவுப் பிரகடனத்தை நினைவுகூரும் வகையில் அப்போதைய மெட்ராசு கவர்னராக இருந்த எர்சுகின் பிரபுவால் திறந்து வைக்கப்பட்டது.