சென்னை சிறுத்தைகள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | சென்னை சிறுத்தைகள் | ||
விளிப்பெயர்(கள்) | சிறுத்தைகள் | ||
நிறுவப்பட்டது | 2011 | ||
தலைமை பயிற்றுநர் | ஜோஸ் பிராசா | ||
அணித்தலைவர் | பிரெண்ட் லிவர்மோர் | ||
தாயக ஆட்டக்களம் | மாநகரத் தலைவர் ராதாகிருஷ்ணன் மைதானம், சென்னை (Capacity 8,670) | ||
உரிமையாளர் | ஸ்போர்ட்ஸ் ஆர்கனைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் | ||
அலுவல் வலைத்தளம் | Official Website | ||
|
சென்னை சிறுத்தைகள் (Chennai Cheetahs) இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த உலக வளைதடிப் பந்தாட்டத் தொடர் விளையாடும் வளைதடிப் பந்தாட்ட அணியாகும். இது சென்னை ஸ்போர்ட்ஸ் ஆர்கனைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் (சிஎஸ்ஓ) என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான ஆணியாகும், ஆஸ்திரேலியரான பிரெண்ட் லிவர்மோர் தலைமையில் ஸ்பானியரான ஜோஸ் பிராசாவால் பயிற்றுவிக்கப்பட்டது. அணியின் சொந்த மைதானம் என்பது சென்னையில் மாநகரத் தலைவர் ராதாகிருஷ்ணன் மைதானமாகும் .
சென்னை விளையாட்டு அமைப்பாளர்களின் (CSO) குழுவினருக்கு சொந்தமானது, ஜூபிளி கிரானைட் உரிமையாளரான எல். டி. நன்வானி என்பவர் இதன் தலைவராக உள்ளார். அணியின் ஒப்பந்த நிதி விவரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், அணியின் உரிமைக்காக அவர்கள் முதலீடு செய்யப்பட்டத் தொகை 15 ஆண்டுகளுக்கு இந்திய ரூபாயில் 120-140 மில்லியன் எனத் தரவுகளின் அடிப்படையில் தெரிகிறது.[1][2]
ஆஸ்திரேலியரான பிரெண்ட் லிவர்மோர் 2004 ஒலிம்பிக் போட்டியில் குராபுராஸ் உடன் தங்கப் பதக்கத்தை வென்றார், ஆனால் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் இவரது அணிமூன்றவது இடத்திற்கே வரமுடிந்தது.[3] நிம்பஸ் ஸ்போர்ட் உடன் இந்திய வளைதடிப்பந்தாட்டக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடரில் பிரெண்ட் லிவர்மோர் சென்னை சிறுத்தை அணியின் தலைவரானார்.[4]
ஜோஸ் பிராசா ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு வளைதடிப் பந்தாட்ட பயிற்சியாளர் ஆவார்.[5] இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணிக்கு 2009 களில் பயிற்சியாளாராக இருந்துள்ளார்.[6] 2010இல் குவாங்சௌவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பயிற்சியாளாராக இருந்துள்ளார்.[7]
இந்த அணியின் பாடலுக்கு தமிழ்ப் பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளராக இருந்தார். பாடல் இசைக்கு கிருஷ்ணா சேத்தன் மற்றும் கவிய வர்மன் ஆகியோர் எழுதியிருந்தனர். சுசித் சுரேஸன், ஆனந்த அரவிந்தாக்சன் மற்றும் நிவாஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.[8]
ஆஸ்திரேலிய நடுநிலை வீரர் பிரெண்ட் லிவர்மோர் தலைமையில் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ஜோஸ் பிராசா பயிற்சியாளராக இந்த அணி நிர்வகிக்கப்படுகிறது.
வீரர் | தேசியம் | இலக்கு |
---|---|---|
இலக்குத் தடுப்பாளர் | ||
பரத் சேத்ரி | இந்தியா | - |
சிதகுந்த நச்தோஷ் குமார் | இந்தியா | - |
ஜஸ்பார் சிங் | இந்தியா | - |
ஸ்டிரைக்கர்ஸ் | ||
ஆதாம் சின்கிளர் | இந்தியா | 9 |
பென்ட்கிட் ஸ்பெர்லிங் | செருமனி | |
தனீசு முசுதபா | இந்தியா | |
தரம்வேர் சிங் | இந்தியா | |
ஹம்சா முஸ்தபா | இந்தியா | |
முத்தண்ணா ஆர். கே. | இந்தியா | |
பீட்டர் கெல்லி | ஆத்திரேலியா | |
பிரவேன் குமார் | இந்தியா | 4 |
ரெட்ரிக் ஹூபெர் | நெதர்லாந்து | |
எச். ஆறுமுகம் | இந்தியா | |
சந்தீப் அன்டில் | இந்தியா | 1 |
எஸ். சிவமணி | இந்தியா | 1 |
வீராசாமி ராஜா | இந்தியா | 1 |
மிட் பீல்டர்ஸ் | ||
அமர்தீப் எக்கா | இந்தியா | |
பிரெண்ட் லிவர்மோர் (அணித் தலைவர்) | ஆத்திரேலியா | |
தவிந்தர்பால் சிங் | இந்தியா | |
கௌரவ் தோக்ஹி | இந்தியா | |
ஜோசப் ரியோடன் | ஆத்திரேலியா | |
மார்க ஹாரிஸ் | ஆத்திரேலியா | 2 |
ரஃபீக் | இந்தியா | |
விகாஸ் சர்மா | இந்தியா | 1 |
விக்ரம் பிள்ளை | இந்தியா | 6 |
டிபென்டர்ஸ் | ||
அமித் குமர் பிரபாகர் | இந்தியா | |
தனஞ்ஜெய் மாதிக் | இந்தியா | |
கௌரவ்ஜீத் சிங் | இந்தியா | |
சமீர் பக்சலா | இந்தியா | |
சுனில் யாதவ் | இந்தியா | 1 |
சயீத் இம்ரான் | பாக்கித்தான் | 19 |
சீசன் | போட்டி | வென்றது | வரையப்பட்டது | தோல்வி | வெற்றி% |
---|---|---|---|---|---|
2012 | 14 | 6 | 1 | 7 | 46.15% |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)