செட்டிமேடு
Chettimedu செட்டிமேடு | |
---|---|
அண்டைப்பகுதி | |
ஆள்கூறுகள்: 13°11′07″N 80°13′30″E / 13.18540°N 80.22489°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | சென்னை |
வட்டம் (தாலுகா) | மாதவரம் |
Metro | சென்னை |
மண்டலம் | மணலி மண்டலம் 2 & வார்டு 17 |
மொழிகள் | |
• Official | Tamil |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 600060 |
வாகனப் பதிவு | TN-18-xxxx & TN-20-xxxx(old) |
Civic agency | பெருநகர சென்னை மாநகராட்சி |
திட்ட முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
நகரம் | சென்னை |
மக்களவை (இந்தியா) தொகுதி | திருவள்ளூர் |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | மாதவரம் |
இணையதளம் | http://www.chennaicorporation.gov.in/ |
செட்டிமேடு, சென்னை (Chettimedu, Chennai)' இந்தியாவின் தமிழ்நாட்டின் பெருநகரமான சென்னைக்கு வடக்கே அமைந்துள்ள ஒரு தொழில்துறை/குடியிருப்புப் பகுதி ஆகும். செட்டிமேடு முந்தைய வடபெரும்பாக்கம் கிராம பஞ்சாயத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அங்கிருந்தபோது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[1] எனவே 2011 ஆம் ஆண்டு முதல் பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாக மாறியது. [2] செட்டிமேடு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், 2018 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் மாதவரம் தாலுகாவின் ஒரு பகுதியாக இருந்தது.
சென்னைக்கு வடக்கே செட்டிமேடு அமைந்துள்ளது. கிழக்கில் கொசப்பூரும் தெற்கில் வடபெரும்பாக்கமு எல்லைகளாக உள்ளன. மற்ற அண்டை பகுதிகளாக மாத்தூர், மாதவரம், தீயம்பாக்கம் மற்றும் மணலி ஆகியவை அமைந்துள்ளன. .