சென்னை மாநகரக் காவல் | |
---|---|
குறிக்கோள் | வாய்மையே வெல்லும் |
சென்னை மாநகரக் காவல் தமிழக காவல்துறையின் பிரிவாகவும் சட்ட அமலாக்கப் பிரதிநிதியாகவும் இந்திய மாநிலத்திலுள்ள தமிழகத்தின் தலை நகரமான சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் மக்களைப் பாதுகாக்கும் பணியினை மேற்கொள்கின்றது.
சென்னை மாநகரக் காவல் சென்னை மாநகர காவல்துறை தமிழக உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பெற்ற ஒரு ஆணையர் (காவல் துறை கூடுதல் இயக்குநர் படிநிலை - ஏ டி ஜி பி) ஆளுமையின் கீழ் செயல்படுகின்றது.
சென்னை மாநகரக் காவல் சென்னையில் 36 துணைப் பிரிவுகளாகவும் அப்பிரிவுகளின் கீழ் அடங்கும் 155 காவல் நிலையங்கள் (மகளிர் காவல்நிலையங்கள் உட்பட)[1][2] தனது சீர்மிகுப் பணியினை மேற்கொள்கின்றது.
சென்னை மாநகர காவல் மின்னணுப் பாதை மூலம் காவல் ஊழியர்களின் வழக்கமானப் பணியினை, செயல் திறன்களை அளவிடும் விதமாக இந்தியாவிலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்தியப் பெருமையைக் கொண்டது.
13 அக்டோபர் 2021 அன்று சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தின் கீழ் இருந்த 32 காவல் நிலையங்களைக் கொண்டு தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி மாநகரக் காவல் ஆணையரகம் நிறுவப்பட்டது.[3][4][5][6]
1659 இல் சென்னை மதராஸ் பட்டணம் என்று எல்லோரும் அழைக்கும் விதத்தில் ஒரு மீனவ கிராமாமாக அமைந்திருந்த காலகட்டத்தில் பெட்ட நாய்க் என்பவரால் கடை நிலை ஊழியர்களைக் கொண்டு நகரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஒருக் குழுவாக அமைக்கப்பட்டது. இவர்களே நகரைப் பாதுகாக்கும் காவலர்களாக செயல்பட்டனர்,
1780 இல் அங்காடிகள், சரக்குகளின் மதிப்பீடுகளை கண்காணிக்கும் விதமாக காவல் துறை கண்காணிப்பாளர் என்ற பதவி அறிமுகப்படுத்தப்பட்டது. பின் ஏற்பட்ட இந்தியப் பிரிவினையால் இந்தியா பிரித்தானியர்களின் ஆளுமைக்குள்ளானபொழுது மதராஸ் காவல் என்று நவீனமாக்கப்பட்டது.
காவல் நிலையங்கள் (பி.எஸ்) | 90 [7][8] | 2009 ஆண்டு தற்பொழுதய நிலவரம் |
அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் (ஏ.டபுள்யு.பி.எஸ்) | 35 [9][10] | 2007 ஆண்டு நிலவரப்படி |
புறக்காவல் நிலையங்கள் (ஒ.பி) | 9[1] | 2005-2006 ஆம் ஆண்டு நிலவரப்படி |
காவல் எல்லைகள் (போலிஸ் லிமிட்) | 220 ச.கி.மீ | 2004 ஆம் ஆண்டு நிலவரப்படி |
மக்கள் தொகை | 70 இலட்சம் | 2004 ஆம் ஆண்டு நிலவரப்படி |
சென்னை மாநகரக் காவல் ஆணையரகம் வேப்போியில் அமைந்துள்ளது. இவ்வாணையரகத்தில் ஆணையராக காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி.பி-இன்ஸ்பெக்டர் ஜென்ரல் ஆப் போலிஸ்) படிநிலையில் பொருப்பேற்றுள்ள ஆணையரே சென்னை மாநகர காவல் துறையின் பொறுப்பாளார் ஆவார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் சென்னை மாநகரக் காவல்துறை இயங்கும். அவர் ஆளுமையின் கீழ் சென்னை மாநகரக் காவல்துறை செயல்படும். சென்னை மாநகரக் காவல் ஆணையரகம் தமிழக காவல்துறை இயக்குநரின் (டி.ஜி.பி- இயக்குநர் ஜென்ரால் ஆப் போலிஸ்) தலைமையில் ம்ற்றும் அவர் வழிகாட்டுதலின்படி இயங்குபவை ஆகும்.
அவருக்குத் துணையாக கூடுதல் காவல் துறை இயக்குநர் (ஏ.டி.ஜி.பி), கூடுதல் ஆணையர்கள் (ஏ.சி.ஒ.பி), இணை ஆணையர்கள் (ஜே.சி-ஜாயின்ட் கமிசனர்) மற்றும் துணை ஆணையர்கள் (டி.சி-டெபுட்டி கமிசனர்) செயல் புரிவர்.
சென்னை மாநகரக் காவல் துறை அமைப்பின் வரைபடம் (சி.ஒ.பி)[11] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
சென்னை மாநகரக் காவல் தனது பணியினை மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்காக கூடுதலாக மஞ்சள் படை மற்றும் நீலப் படை என்ற இரு இருசக்கர வாகனப் படைப்பிரிவுகளும் , ரோந்து செல்லும் நான்கு சக்கர ஊர்திகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இப்படையினரின் வாகனங்கள் நவீன தரத்துடன் காவல்துறைச் சின்னங்கள் பொறிக்கப்பட்டு , எச்சரிக்கை ஒலி, ஒளிரும் சுழல் விளக்கு, பொது மக்களின் முகவரிகளை மின்னணு முறையில் அறியும் வகை, கம்பியில்லாத் தொடர்புக் கருவி போன்ற நவீன அமைப்புகளுடன் மக்களை வலம் வந்து பணியாற்றுகின்றன. காவல் துறை கட்டுப் பாட்டு அறையின் மக்கள் அழைப்புக்கு பிரதிச் செயல் நேரமாக 3 லிருந்து 4 நிமிட நேரமாக நிர்ணயிக்கப்பட்டு துரிதமாக மக்கள் பணியாற்றுகின்றது.
இந்தியக் காவல் பணி வரலாற்றின் முதன் முறையாக தமிழகத்தின் சென்னை மாநகரக் காவல் துறைக்கு ஹூன்டாய் ஊர்திகள் வழங்கப்பட்டன. சட்டம் ஒழுங்குப் பிரிவிற்காக 78 ஊர்திகளும், 21 ஊர்திகள் போக்குவரத்துக் காவல் பிரிவிற்காகவும் வழங்கப்பட்டன. மீதமுள்ள 4 ஊர்திகள் தமிழக முதல்வர் ஊர்தியின் பாதுகாப்பு ஊர்திகளாக செயல்படுகின்றன.
13 அக்டோபர் 2021 அன்று சென்னை மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில காவல் நிலையங்களைக் கொண்டு ஆவடி மாநகரக் காவல் ஆணையரகம் மற்றும் தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் நிறுவ தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.[13] [14]