தமிழகத்தின் தலைநகரம் சென்னை, 426 சதுர கி.மீ. பரப்புள்ள பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதி, தமிழகத்தின் அரசியல் தலைநகராக மட்டுமல்லாது, தென்னிந்தியாவின் கல்வித் தலைநகரமாகவும் விளங்கிவருகின்றது. சென்னையில் பல புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், தொழிற்கல்வி நிறுவங்கள் போன்றவை உள்ளன.[1][2][3]
இந்தியாவில் பல்கலைக் கழகங்கள் "பல்கலைக்கழக மானியக் குழு" (University Grants Commission) அங்கீகாரத்துடன் செயல்படுகின்றது. அந்த வகையில், சென்னையில் கிழ்க்காணும் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் செயல்பட்டுவருகின்றன.