தென்னிந்தியாவின் முக்கிய சில்லறை விற்பனை மற்றும் வியாபார மையமாக சென்னை உள்ளது. அதன் புறநகர்ப் பகுதிகளில் சில பிரத்யேக வியாபாரத் தளங்களாக சேவை செய்கின்றன. பதினேழாம் நூற்றாண்டில் நகரத்தை உருவாக்கியதில் இருந்து, நகரின் பிரதான வர்த்தக மையத்தில் ஜார்ஜ் டவுனும் ஒன்றாகும். எனினும், பல நூற்றாண்டுகள் கடந்து, நகரத்தின் மத்திய வர்த்தக மையமானது புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து, தற்போதுள்ள அண்ணா மேம்பாலம் நோக்கி நகர்கிறது. தியாகராய நகர் சில்லறை வணிகத்தில் முக்கிய இடத்தில் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வியாபாரத் தளமாக சென்னை அமைந்துள்ளது. "கன்னாட் பிளேஸ், புதுதில்லி" அல்லது "இணைப்புச் சாலை, மும்பை" ஆகியவற்றின் வருவாயை விடவும் இருமடங்கில் இது அதிகமாக உள்ளது.[1]
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில், சென்னையின் ஜார்ஜ் டவுன் பகுதிகளில் முதல் பட்டுச்சேலை கடைகள் தோன்றின. இந்தக் கடைகள் 1915இல், புதிய கடைகள் திறக்கப்படும் வரை பிரபலமாக இருந்தன. சிந்தாதிரிப்பேட்டை அருகில் புதிய கடைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகிலும் புதிய கடைகள் உருவாயின, பின்வரும் ஆண்டுகளில். 1930களின் பிற்பகுதியில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு அருகே இதே போன்ற கடைகள் திறக்கப்பட்டன. இந்த நேரத்தில், 1923 ஆம் ஆண்டில் மாம்பலத்தை அடுத்த தியாகராயர் நகர் விரிவாக்கம் ஆனது. 1911 ஆம் ஆண்டில் எழும்பூரில் இருந்து காஞ்சிபுரம் வரை புறநகர் இரயில் பாதை அமைத்து மாம்பலத்தில் ஒரு புகை வண்டி நிலையம் ஏற்படுத்தப்பட்டது. 1950களில், துணிக் கடைகள் தியாகராயர் நகரில் தோன்றின. விரைவிலேயே அங்கு நகைக் கடைகளும் திறக்கப்பட்டன.[2]
தென்னிந்திய பிராந்தியத்தில் மிக முக்கியமான தங்கச் சந்தையாக சென்னை உள்ளது. இது மொத்த தேசிய உற்பத்தியில் 45 சதவிகிதமான 800 டன் ஆகும். தியாகராயர் நகரில் 70 முதல் 80% தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.[2]
2012 ஆம் ஆண்டு குஷ்மேன் & வேக்ஃபீல்ட் அறிக்கையின்படி உலகின் முக்கிய வீதிகளின் வியாபாரத்தில் , நுங்கம்பாக்கத்தின் காதர் நவாஸ் கான் சாலை, முதல் 10 இடங்களில் இருந்தது. இது, 2009 ஆம் ஆண்டில், 36.7% அதிகரிக்கப்பட்டுள்ளது.[3]
பெயர் | அமைவிடம் | வருடம் | பரப்பளவு | ஆதாரம் |
---|---|---|---|---|
ஸ்பென்சர் பிளாசா | அண்ணா சாலை | 1863 | 250,000 sq ft (23,000 m2) | |
அல்சா பேரங்காடி | மான்டீத் சாலை, எழும்பூர் | 1998 | ||
அபிராமி மெகா பேரங்காடி | புரசைவாக்கம் | 2003 | ||
மாயாஜால் | கானாத்தூர்r, மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு) | 2006 | 30,000 sq ft (2,800 m2) | |
சென்னை சிட்டி சென்டர் | மயிலாப்பூர் | 2006 | 117,600 sq ft (10,930 m2) | |
அம்பா ஸ்கைவாக் பேரங்காடி | அமைந்தக்கரை | 2009 | 650,000 sq ft (60,000 m2) | |
எக்ஸ்பிரஸ் அவென்யூ | வொயிட்ஸ் சாலை, சென்னை | 2010 | 1,500,000 sq ft (140,000 m2) | |
சந்திரா பேரங்காடி | ஆர்காடு சாலை, விருகம்பாக்கம் | 2011 | 143,130 sq ft (13,297 m2) | [4] |
கோரமண்டல் பிளாசா | நாவலூர், ராஜீவ் காந்தி சாலை | 2011 | 300,000 sq ft (28,000 m2) | [5][6][7] |
ஸ்பெக்ட்ரம் பேரங்காடி | பாப்பர்ஸ் ஆலை சாலை, பெரம்பூர் | 2011 | 160,000 sq ft (15,000 m2) | |
ரெமீ பேரங்காடி | அண்ணா சாலை, தேனாம்பேட்டை | 2012 | 225,000 sq ft (20,900 m2) | [8] |
பெர்காமோ | காதர் நவாஸ் கான் சாலை, நுங்கம்பாக்கம் | 2012 | 40,000 sq ft (3,700 m2) | |
கோல்ட் சவுக் கிராண்ட் பேரங்காடி | ஜிஎஸ்டி சாலை, வண்டலூர் | 2015 | 800,000 sq ft (74,000 m2) | [9][10] |
பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி | வேளச்சேரி | 2013 | 2,400,000 sq ft (220,000 m2) | [11] |
ஃபோரம் விஜயா பேரங்காடி | ஆற்காடு சாலை வடபழனி | 2013 | 700,000 sq ft (65,000 m2) | [12] |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)