செபங்கார் (P171) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Sepanggar (P171) Federal Constituency in Sabah | |
செபங்கார் மக்களவைத் தொகுதி (P171 Sepanggar) | |
மாவட்டம் | கோத்தா கினபாலு மாவட்டம்; மேற்கு கரை பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 108,370 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | செபங்கார் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோத்தா கினபாலு |
பரப்பளவு | 317 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | முசுதபா சக்முத் (Mustapha Sakmud) |
மக்கள் தொகை | 336,253 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
செபங்கார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sepanggar; ஆங்கிலம்: Sepanggar Federal Constituency; சீனம்: 实邦加国会议席) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவு, கோத்தா கினபாலு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P171) ஆகும்.[5]
செபங்கார் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து செபங்கார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
கோத்தா கினபாலு மாவட்டம் என்பது சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோத்தா கினபாலு நகரம்.
சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் கோத்தா கினபாலு மாவட்டமும் ஒன்றாகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவை மையமாகக் கொண்டுள்ளது. கோத்தா கினபாலு மாவட்டம் 350 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது
2020-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோத்தா கினபாலு மாவட்டத்தின் மக்கள் தொகை சுமார் 5,00,425. கோத்தா கினபாலு மாவட்டத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவின் பழைய பெயர் 'ஜெசல்டன்' (Jesselton). 1890-களில் அது ஒரு மீனவர் கிராமமாக இருந்தது. பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் புதிய நிர்வாக மையத்திற்கு ஜெசல்டன் என்று பெயர் வைக்கப்பட்டது.[7]
செபங்கார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
செபங்கார் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P171 | 2004-2008 | எரிக் மஜிம்புன் (Eric Majimbun) |
பாரிசான் நேசனல் (சபா முற்போக்கு கட்சி) |
12-ஆவது மக்களவை | 2008 | |||
2008-2013 | சபா முற்போக்கு கட்சி | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | ஜுமாட் இட்ரிசு (Jumat Idris) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
14-ஆவது மக்களவை | 2018-2022 | அசீசு சமான் (Azis Jamman) |
வாரிசான் | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | முசுதபா சக்முத் (Mustapha Sakmud) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
முசுதபா சக்முத் (Mustapha Sakmud) | பாக்காத்தான் அரப்பான் (PH) | 27,022 | 38.44 | 38.44 | |
யாகுப்பா கான் (Yakubah Khan) | பாரிசான் நேசனல் (BN) | 19,980 | 28.42 | 3.88 ▼ | |
அசீசு சமான் (Azis Jamman) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 18,594 | 26.45 | 33.02 ▼ | |
சுமார்டி லுக்மான் (Jumardie Lukman) | மக்களாட்சி கட்சி (KDM) | 3,977 | 5.66 | 5.66 | |
யூசோப் குஞ்சாங் (Yusof Kunchang) | தாயக இயக்கம் (GTA) | 731 | 1.04 | 1.04 | |
மொத்தம் | 70,304 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 70,304 | 98.10 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,359 | 1.90 | |||
மொத்த வாக்குகள் | 71,663 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,08,370 | 64.87 | 13.66 ▼ | ||
Majority | 7,042 | 10.02 | 17.15 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)