செபுத்தே (P122) மலேசிய மக்களவை தொகுதி கோலாலம்பூர் | |
---|---|
Seputeh (P122) Federal Territories of Malaysia | |
செபுத்தே மக்களவைத் தொகுதி, கோலாலம்பூர் கூட்டாட்சி | |
வட்டாரம் | கோலாலம்பூர் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | (2022) |
மக்களவை உறுப்பினர் | திரேசா கோக் |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 124,805 |
தொகுதி பரப்பளவு | 31 ச.கி.மீ. |
இறுதி தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022 |
செபுத்தே மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Seputeh; ஆங்கிலம்: Seputeh Federal Constituency; சீனம்: 士布爹国会议席; என்பது கோலாலம்பூர் கூட்டடரசுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P122) ஆகும்.
செபுத்தே கூட்டரசுத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 1986-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டு முதல் மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் (2022 Malaysian General Election) இந்தத் தொகுதியில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் திரேசா கோக் (Teresa Kok) என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்தத் தொகுதியின் பரப்பளவு 31 சதுர கி.மீ. 2022-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி 124,805 வாக்காளர்கள் உள்ளனர்.
செபுத்தே தொகுதியின் மக்களவை உறுப்பினர்கள் (1986 - 2022) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
டாமன்சாரா தொகுதியில் இருந்து 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | |||
7-ஆவது மக்களவை | 1986-1990 | லியூ ஆ கிம் | ஜனநாயக செயல் கட்சி |
8-ஆவது மக்களவை | 1990-1995 | ||
9-ஆவது மக்களவை | 1995-1999 | ||
10-ஆவது மக்களவை | 1999-2004 | திரேசா கோக் (Teresa Kok) | |
11-ஆவது மக்களவை | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | 2008-2013 | ||
13-ஆவது மக்களவை | 2013-2018 | ||
14-ஆவது மக்களவை | 2018–2022 | பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி)[1] | |
15-ஆவது மக்களவை | 2022-தற்போது வரையில் |
சான்று: https://live.chinapress.com.my/ge15/parliament/KUALALUMPUR
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
124,805 | - | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
88,107 | 70.60% | ▼ -11.23 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
87,454 | 100.00% | - |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
251 | - | - |
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
402 | - | - |
பெரும்பான்மை (Majority) |
67,187 | 76.83% | ▼ -3.11 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[2][3] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
திரேசா கோக் (Teresa Kok Suh Sim) |
பாக்காத்தான் அரப்பான் (PH) | 87,454 | 73,234 | 83.74% | -6.23 ▼ | |
அலன் வோங் இயீ யெங் (Alan Wong Yee Yeng) |
பெரிக்காத்தான் நேசனல் (PN) | 6,047 | 6.91% | +6.91 | ||
லீ கா இங் (Lee Kah Hing) |
பாரிசான் நேசனல் (BN) | 6,032 | 6.90% | -3.13 ▼ | ||
லீ வை கோங் (Lee Wai Hong) |
சுயேச்சை | 1,276 | 1.46% | +1.46 | ||
சோய் சான் யே (Choy San Yeh) |
சுயேச்சை | 865 | 0.99% | +0.99 |
#. | உள்ளூராட்சி |
---|---|
P122 | கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) |