செமாவ் தீவு (Semau), என்பது பெசமாவ் மற்றும் பாசர் பெசாவ் என்று அழைக்கப்படும் ஓர் தீவு ஆகும். இது இந்தோனேசியாவின் சிறு சுண்டாத் தீவுகளைச் சார்ந்தது ஆகும். இது குபாங் துறைமுகத்திலிருந்து 20 மைல் தொலைவில் அமைந்துள்ளது. செமாவ் தீவில் வசிப்பவர்கள் கெலாங் மக்கள் என்றும் இவர்கள் குப்படங் பகுதியினர் ஆவர்.[1] இத்தீவிலிருந்து விறகு, கரி, சோளம், தர்பூசணி மற்றும் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.[1] கடலில் மூழ்குதல், நீச்சல் மற்றும் பிற நீர் விளையாட்டுகள் இத்தீவில் பிரபலமான பொழுதுபோக்கு அம்சங்களாகும். இத்தீவு விடுமுறையின் போது சுற்றுலாவிற்குச் சிறந்த பகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)