செம்பியன் மாதேவி (கி.பி 910 – 1001) என்பவர் சிவஞான கண்டராதித்தரின் பட்டத்தரசி ஆவார். இவரது சமாதி இன்று சேவூரில் (செம்பியன் கிழானடி நல்லூர்) அமைந்துள்ளது
சோழர்கால செப்புத் திருமேனிகள் என்றாலே நினைவுக்கு வருபவர் பெரியபிராட்டி செம்பியன் மாதேவியார் என்று தமிழாய்வு.ஆர்க் போற்றுகிறது.
[1] இவர் வாழ்ந்த ஊர் செம்பமதை காலப்போக்கில் (இராதாநரசிம்மபுரம்) என்னு பெயர் மாற்றப்பட்டது
செம்பியன் மாதேவி சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மழவர் குடும்பத்தில் பிறந்தவர். சோழப் பேரரசர் கண்டராத்தினாரை மணந்தார். அவரைப் போல தேவியாரும் சிறந்த சிவத்தொண்டராக விளங்கினார். தன் மகன் மதுராந்தகன், தன் கொழுந்தன் அரிஞ்சயரின் மகன் சுந்தர சோழரின் மகன்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், மற்றும் சுந்தர சோழரின் மகளான குந்தவைப் பிராட்டியையும் பொறுப்புடன் வளர்த்தவர். சோழப் பேரரசுகளில் கண்டராத்தினார் மறைந்த பிறகும், ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகும் ஏற்பட்ட சங்கட சூழலில் பட்டத்திற்கு உரியவர் யாரென ஆலோசனை கூறியவர் இவர். ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மன் சிறந்த சிவபக்தனாக இருந்தமைக்கும், தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டுவதற்கு பெரும் காரணமாக இருந்தவர் செம்பியன் மாதேவியார்.[2]
முதலிய ஆறு சோழப்பேரரசர்களின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியார். கண்டராத்த சோழர் கி.பி 957ல் மரணமடைந்த போது அரிஞ்சய சோழனை அரசாள வைத்தவர். ஆதித்த கரிகாலன், ராஜராஜன், குந்தவை ஆகியோரை அன்போடு வளர்த்தவர். மேலும் கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 – 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.
செம்பியன் மாதேவியார் தம் காலத்தில் ஏராளமான சிவன் கோயில்களைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்கள். அவை கி.பி 7 ஆம் நூற்றாண்டிலும், கி.பி 8 ஆம் நூற்றாண்டிலும் சோழப்பேரரசுகளினால் மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட சிவ ஆலையங்கள். அவர் முதன் முதலில் சீரமைத்த திருக்கோவில் திருநல்லம் ஆகும். [3] சோழ மண்டலத்தில் செங்கற் கோயிலாக இருந்த பத்து ஆலயங்களைக் கருங்கல் கட்டமைப்பாக (கற்றளி) மாற்றிக் கட்டினார். அவை
புதிதாகவும் ஆகம விதிக்கு உட்பட்டும் கற்றளியாக இவர் கட்டிய கோயிலே செம்பியன் மாதேவியில் இருக்கும் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலாகும். கோவில்களுக்கு நாள்தோறும், திங்கள்தோறும் கைங்கரியங்கள் சிறப்பாக நடக்க இறையிலி கொடுத்தார். பல சிவதளங்களுக்கு பொன், வெள்ளியென அணிகலன்களும் கொடுத்ததாக கல்வெட்டுகளில் அறிய முடிகிறது.[4] செம்பியன் மாதேவியார் குறித்த கல்வெட்டுகள் திருவேள்விக்குடி சிவதளத்தில் உள்ளது. [5]
இன்றளவும் சோழர்கள் காலக் கோயில்கள் நிலைத்திருக்க செம்பியன் மாதேவியாரின் கற்றளி மாற்றமே காரணமாகும்.
பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியைக் கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.