செம்பூர்ணா (P189) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Semporna (P189) Federal Constituency in Sabah | |
செம்பூர்ணா மக்களவைத் தொகுதி (P189 Semporna) | |
மாவட்டம் | செம்பூர்ணா மாவட்டம் |
வட்டாரம் | தாவாவ் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 72,169 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | லகாட் டத்து மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | செம்பூர்ணா; தாவாவ் |
பரப்பளவு | 1,126 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | சபா பாரம்பரிய கட்சி |
மக்களவை உறுப்பினர் | சாபி அப்டால் (Mohd Shafie Apdal) |
மக்கள் தொகை | 166,587 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
செம்பூர்ணா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Semporna; ஆங்கிலம்: Semporna Federal Constituency; சீனம்: 仙本那联邦选区) என்பது மலேசியா, சபா, தாவாவ் பிரிவு; செம்பூர்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P189) ஆகும்.[5]
செம்பூர்ணா மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து செம்பூர்ணா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
செம்பூர்ணா மாவட்டம் என்பது சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் செம்பூர்ணா நகரம். கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 531 கி.மீ. (330 மைல்) தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது.
2020-ஆம் ஆண்டு மலேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி செம்பூர்ணா மாவட்டத்தில் 166,587 மக்கள் வசிக்கின்றனர். 19-ஆம் நூற்றாண்டில் பிலிப்பீன்சு நாட்டை ஆட்சி செய்த எசுப்பானியர்களின் ஆதிக்கத்தின் கீழ் செம்பூர்ணா மாவட்டம் இருந்ததால், இங்கு இன்னும் சபகானோ எனும் எசுப்பானிய மொழி பேசப்படுகிறது.
இந்த மாவட்டம் 1887 மே 10-ஆம் தேதி அதிகாரப் பூர்வமாக நிறுவப் பட்டது. இந்த இடத்தின் பெயர் முதலில் தோங் ராலுன் (Tong Talun) என்று இருந்தது. பின்னரே செம்பூர்ணா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. செம்பூர்ணா என்றால் பஜாவு மொழியில் ஓய்வுக்கான இடம் என்று பொருள்.[7]
செம்பூர்ணா நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
லகாட் டத்து தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P153 | 1986–1990 | சக்காரான் டன்டாய் (Sakaran Dandai) |
பாரிசான் நேசனல் (அசுனோ) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | பாரிசான் நேசனல் (அம்னோ) | ||
9-ஆவது மக்களவை | P164 | 1995–1999 | சாபி அப்டால் (Shafie Apdal) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P189 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013-2016 | |||
2016–2018 | வாரிசான் | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
சாபி அப்டால் (Mohd Shafie Apdal) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 28,702 | 73.77 | 6.43 ▼ | |
நிக்சன் அப்துல் அபி (Nixon Abdul Habi) | சபா மக்கள் கூட்டணி (GRS) | 7,892 | 20.28 | 20.28 | |
ரசுதாம் பாண்டரோக் (Arastam Pandorog) | பாக்காத்தான் (PH) | 1,848 | 4.75 | 4.75 | |
ராஜிக் அமீத் (Rajik Hamid) | தாயக இயக்கம் (GTA) | 467 | 1.20 | 1.20 | |
மொத்தம் | 38,909 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 38,909 | 97.33 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,069 | 2.67 | |||
மொத்த வாக்குகள் | 39,978 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 72,169 | 53.91 | 17.83 ▼ | ||
Majority | 20,810 | 53.49 | 8.36 ▼ | ||
சபா பாரம்பரிய கட்சி கைப்பற்றியது (தொகுதியின் முதல் தேர்தல்) | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)