செம்பூர்ணா மாவட்டம் Semporna District Daerah Semporna | |
---|---|
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 4°29′00″N 118°37′00″E / 4.48333°N 118.61667°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | தாவாவ் |
தலைநகரம் | செம்பூர்ணா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,149 km2 (444 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,66,587 |
• அடர்த்தி | 140/km2 (380/sq mi) |
வாகனப் பதிவெண்கள் | SD ST (1980-2018) SW (2018-) |
இணையதளம் | ww2 www |
செம்பூர்ணா மாவட்டம்; (மலாய்: Daerah Semporna; ஆங்கிலம்: Semporna District) என்பது மலேசியா, சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்த செம்பூர்ணா மாவட்டத்தின் தலைநகரம் செம்பூர்ணா நகரம் (Semporna Town).
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சுமார் 1,883 கி.மீ. (1,149 மைல்) தொலைவிலும்; சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 531 கி.மீ. (330 மைல்) தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு மலேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி செம்பூர்ணா மாவட்டத்தில் 166,587 மக்கள் வசிக்கின்றனர்.
சபா மாநிலத்தின் தாவாவ் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (British North Borneo Chartered Company), சண்டாக்கான் நகரை நிறுவிய உடனேயே செம்பூர்ணா நகரம் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் சீன வர்த்தகர்கள் குடியேறினர். பெரும்பாலானவர்கள் சூலு சுல்தானகத்தின் மீதான எசுப்பானிய தாக்குதல்களில் (Spanish attacks on the Sulu Sultanate) இருந்து தப்பி வந்தவர்கள்.
1887 மே 10-ஆம் தேதி அதிகாரப் பூர்வமாக நிறுவப் பட்டது. இந்த இடத்தின் பெயர் முதலில் தோங் ராலுன் (Tong Talun) என்று இருந்தது. பின்னரே செம்பூர்ணா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. செம்பூர்ணா என்றால் பஜாவு (Bajau) மொழியில் ஓய்வுக்கான இடம் (place of rest). என்று பொருள்.[1]
19-ஆம் நூற்றாண்டில் பிலிப்பீன்சு நாட்டை ஆட்சி செய்த எசுப்பானியர்களின் ஆதிக்கத்தின் கீழ் செம்பூர்ணா மாவட்டம் இருந்ததால், இங்கு இன்னும் சபகானோ எனும் எசுப்பானிய மொழி பேசப்படுகிறது.
செம்பூர்ணா நகரம், செம்பூர்ணா தீபகற்பத்தின் (Semporna Peninsula) முனையில், டார்வல் விரிகுடாவின் (Darvel Bay) தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தண்டுவோ (Tanduo) என்ற கிராமத்தில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் செம்பூர்ணா நகரம் உள்ளது. இந்த நகரப் பகுதிக்குச் சொந்தமாக 40-க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன.
இவற்றில் சிபாடான் தீவுகள் (Sipadan Island), மட்டாகிங், மாபுல், கப்பலாய் போன்ற பிரபலமான சுற்றுலாத் தீவுகளும் அடங்குகின்றன. செம்பூர்ணா நகரம், சிபாடான் தீவுகளுக்கு பயணிப்பதற்கான முக்கிய தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது.[2]