செம்போங் | |
---|---|
Chembong | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°36′23.9″N 102°05′16.0″E / 2.606639°N 102.087778°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | ரெம்பாவ் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 71300 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 06685 000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
செம்போங் (மலாய்; ஆங்கிலம்: Chembong; சீனம்: 钦邦) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ரெம்பாவ் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மட்டும், முக்கிம் என்பதை லுவாக் (Luak) என்று அழைக்கிறார்கள்.[1]
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தொகுதிக்கும் செம்பொங் என்றுதான் பெயர். செம்பொங்கில் மலாய் இனத்தவர் பெரும்பான்மையினர்; மற்றும் சீனர் மற்றும் இந்திய மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இங்கு ஏராளமான பள்ளிவாசல்கள் உள்ளன; மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், ஸ்ரீ சுப்பிரமணியர் இந்து ஆலயங்களும் உள்ளன. தாமான் பாலோங் சாலைக்கு வடக்கே ஒரு சீன ஆக்கியான் மதத் தளமும் உள்ளது.[2]
செம்பொங்கில்பெரும்பான்மையான மக்கள் விவசாயிகள், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆகும். செப்டம்பர் 2019-இல், நெஸ்லே மலேசியா தனது மிலோ செம்போங் (MILO Chembong) தொழிற்சாலையின் விரிவாக்கத்தைத் தொடங்கி 1993-இல் செயல்படத் தொடங்கியது. இப்போது உலகின் மிகப்பெரிய மிலோ உற்பத்தித் தளமாகவும் விளங்குகிறது.[3]
நெகிரி செம்பிலான்; ரெம்பாவ் மாவட்டத்தில் செம்போங் தோட்ட உருமாற்றத் தமிழ்ப்பள்ளி உள்ளது. 137 மாணவர்கள் பயில்கிறார்கள். 17 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். செம்போங் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக 1938-இல் சி.ஏ. சோன்ஸ் எனும் ஆசிரியர் ஒருவரால் நிறுவப்பட்டது. தொடக்கத்தில் இந்தப் பள்ளி செம்போங் தோட்டத்தில் இருந்த வீடு ஒன்றில் தொடங்கப்பட்டது.[4]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD3032 | செம்போங் தோட்டம் | SJK(T) Ladang Chembong[5] | செம்போங் தோட்ட உருமாற்றத் தமிழ்ப்பள்ளி | 71300 | செம்போங் | 137 | 17 |