செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் (சென்னை)


புனித ஜார்ஜ் கோவில்
St. George's Cathedral
புனித ஜார்ஜ் கோவில் - பக்கப் பார்வை
13°03′06″N 80°15′09″E / 13.0518°N 80.2525°E / 13.0518; 80.2525
அமைவிடம்சென்னை, தமிழ் நாடு
நாடுஇந்தியா
சமயப் பிரிவுதென்னிந்தியத் திருச்சபை
வலைத்தளம்www.csistgeorgescathedral.org
வரலாறு
அர்ப்பணிப்புபுனித ஜார்ஜ்
Architecture
நிலைகத்தீட்ரல் (பெருங்கோவில்)
செயல்நிலைசெயல்பாட்டில் உள்ளது
கட்டடக் கலைஞர்கர்னல் சே. எல். கால்டுவெல்
நிறைவுற்றது1815
கட்டுமானச் செலவு57,225 பொற்காசுகள் (பகோடாக்கள்)
குரு
ஆயர்மேதகு வி. தேவசகாயம்
Priest in chargeஅருள்திரு இம்மானுவேல் தேவகடாட்சம்
புனித ஜார்ஜ் கோவில் - முன் பார்வை

புனித ஜார்ஜ் கோவில் (St. George’s Cathedral) என்பது முன்னாள் ஆங்கிலிக்கன் சபை, இந்நாள் தென்னிந்தியத் திருச்சபையின் சென்னை மறைமாவட்ட முதன்மைக் கோவில் ஆகும். இக்கோவில் 1815ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம்

[தொகு]

இக்கோவிலின் வரலாறு சென்னை நகரோடும் இந்தியாவோடும் இணைந்த கிறித்தவ வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையது. ஆங்கிலிக்கன் சபை, மெதடிஸ்டு சபை, பிரெஸ்பிட்டேரியன் சபை மற்றும் கான்ங்ரகேஷனல் சபைகள் ஒன்றிணைந்து தென்னிந்தியத் திருச்சபை என்னும் ஒன்றிப்புச் சபை இக்கோவிலில்தான் 1947, செப்டம்பர் மாதம் தொடங்கியது. அப்போது நடந்த நிகழ்ச்சியில் இக்கோவில் நிரம்பி வழிந்ததோடு, வெளியே எழுப்பப்பட்ட பந்தலில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் குழுமியிருந்தனர். உலக அளவிலேயே பல திருச்சபைகள் ஒன்றிணைந்து ஒன்றிப்பு முயற்சியைத் தொடர இந்தத் திருச்சபை ஒன்றிப்பு வழிகோலியது.

கட்டடத்தின் சிறப்புகள்

[தொகு]

புனித ஜார்ஜ் கோவிலின் கோபுரம், தூண்கள், பளிங்குச் சிலைகள், சுவர் ஓவியங்கள், நினைவுக் கல்லறைகள் போன்றவை அதற்குச் சிறப்பாக அமைந்துள்ளன. பரந்து விரிந்த ஒரு படிக்கட்டில் ஏறி, கோவிலுக்குள் நுழையலாம். தலைசிறந்த கலையழகோடும் கட்டட நுணுக்கத்தோடும் அமைந்த இக்கோவிலில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பிரித்தானிய காலத்தில் ஆட்சி செய்த ஆளுஞர்கள் தம் குடும்பத்தோடு வழிபாட்டில் பங்கேற்றனர். அதுபோலவே, அரசுப் பதிலாள்கள் (Viceroys) சென்னைக்கு வருகைதந்த போது அங்கு வழிபட்டனர்.

மாலை ஒளியில் கோவில் துலக்கம்

கோவில் வரலாறு

[தொகு]
முதன்மைப் பீடம்

இக்கோவில் 1815ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கட்டடத்தை எழுப்ப மக்களே நிதி உதவி அளித்தார்களாம்.[1] இதைக் கட்டிமுடிக்க அக்காலத்தில் 41,709 பொற்காசுகள் (பகோடாக்கள் - pagodas) செலவாயின. கோவிலின் உள்ளே செய்யப்பட்ட மரவேலைகள், குழலிசைக் கூடம் (pipe organ), கட்டடக் கலைஞருக்கு அளிக்கப்பட்ட ஊக்கவூதியம் ஆகியவற்றைக் கணக்கிட்டால் மொத்த செலவு 57,225 பொற்காசுகள். ஒரு பொற்காசு (பகோடா) இந்திய ரூபாய் மதிப்பில் 3.50 என்று கணக்கிடப்படுகிறது.

பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் மூத்த கட்டடக் கலைஞர் கர்னல் J. L. கால்டுவெல் (Col. J. L. Caldwell) கோவில் கட்டடத்தின் முன்வரைவை ஆக்கினார். துணைக் கட்டடக் கலைஞர் தே ஹாவில்லாண்ட் (Captain De Havilland) கோவில் கட்டடத்தை நிறைவுக்குக் கொணர்ந்தார். இவரே சென்னையில் அமைந்த மற்றொரு புகழ்மிக்க வழிபாட்டுத் தலமாகிய புனித அந்திரேயா கோவிலையும் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் வசதியாக அமைந்திருக்கும் இடம் சத்திரப் பாக்கம் (Choultry Plain) என்று அழைக்கப்பட்டது. பிரித்தானியர் அக்கோவிலில் 1815இலிருந்தே வழிபட்டாலும், 1816, சனவரி 6ஆம் நாளில்தான் கல்கத்தாவின் முதல் ஆங்கிலிக்க பேராயர் மேதகு தாமஸ் ஃபேன்ஷா மிட்டில்டன் (Rt. Rev. Thomas Fanshaw Middleton) அக்கோவிலை "இங்கிலாந்து திருச்சபையின் மரபுக்கு ஏற்ப இறைபணி நிகழ்த்த" அர்ச்சித்தார்.[1]

கோவிலில் உள்ள குழலிசைக் கூடம்

படத் தொகுப்பு

[தொகு]

கோவில் வடிவமைப்பு

[தொகு]
கோவில் தரை வரைவு
கோவில் தள வரைவு

சென்னை ஆங்கிலிக்க/தென்னிந்தியத் திருச்சபை பேராயர்கள்

[தொகு]
  • Rt. Rev. Daniel Corrie 1835-1837
  • Rt. Rev. George John Trevor Spencer 1837-1849
  • Rt. Rev. Thomas Dealtry 1849-1861
  • Rt. Rev. Frederick Gell 1861-1899
  • Rt. Rev. Henry Whitehead 1899-1922
  • Rt. Rev. Edward Harry Mansfield Waller 1923-1941
  • Rt. Rev. Arthur Michael Hollis 1942-1954
  • Rt. Rev. Dr. David Chellappa 1955-1964
  • Rt. Rev. Lesslie Newbigin 1965-1974
  • Rt. Rev. Dr. Sundar Clarke 1974-1989
  • Rt. Rev. Dr. Masillamani Azariah 1990-1999
  • Rt. Rev. Dr. V. Devasahayam 1999-

புனித ஜார்ஜ் கோவில் தலைமைப் பாதிரிமார்

[தொகு]
  • Rev. Clarence Edwin Brett 1947
  • Rev. John Murdoch Wallace 1947-1948
  • Rev. Robert Leslie Watson 1948-1958
  • Rev. E.J.M. Wyld & Rev. R.L. Manson 1957-1958
  • Rev. Ian Matheson Calvert 1959-1962
  • Rev. David Max Samuel 1962-1964
  • Rev. Sundar Clarke 1964-1969
  • Rev. Eugene Paul Heideman 1969-1970
  • Rev. Ebenezer Immanuel 1970-1975
  • Rev. Swamiappan David 1975-1980
  • Rev. Christopher Solomon 1980-1984
  • Rev. R. Trinity Baskeran 1984-1985
  • Rev. D. Amos Manoharan 1985-1990
  • Rev. David Devairakkam 1990-1995
  • Rev. Oliver T. Arockiam 1995-1999
  • Rev. N.G. Mathew 1999-2003
  • Rev. Dr. Noel Jason 2003-2006
  • Rev. D.C. Premraj 2006-2011
  • Rev. Immanuel 2011-

படத் தொகுப்பு

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Lawrence, H.S.S. (2007). St. George's Cathedral. pp. p4. {{cite book}}: |pages= has extra text (help)

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]