ஜெயவிலாஸ் அரண்மனை (Jai Vilas Mahal) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் அமைந்துள்ள ஓர் கட்டடம் ஆகும். இது சிந்தியா அரச பரம்பரையினரின் வசிப்பிடமாக உள்ளது. இத்தாலியக் கட்டடக் கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ள இது 1809 ஆம் ஆண்டு சர் மைக்கேல் ஃபிலோஸ் (Lt. Col. Sir Michael Filose) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
கொலு மண்டபத்தில் (தர்பார்) இரண்டு டன் எடையுள்ள இரு சரவிளக்குகள் தொங்க விடப்பட்டுள்ளன. இவற்றைத் தொங்கவிடும் முன் கூரை தாங்குமா எனச் சோதிக்கப் பத்து யானைகளை மேலே ஏற்றிச் சோதனை செய்யப்பட்டது.
இவ்விடத்தில் உள்ள 35 அறைகள் சிந்தியா கண்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளன. இங்கே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொருட்கள் மற்றும் முந்தைய அரசர்கள் பயன்படுத்திய பொருட்கள் எனப் பலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.